கொரோனா- 19 மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய தற்காப்பு விழிப்புணர்வு* - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Wednesday, 20 May 2020

கொரோனா- 19 மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய தற்காப்பு விழிப்புணர்வு*


*கொரோனா- 19* *மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய தற்காப்பு விழிப்புணர்வு*
🔰⚜️🔰⚜️🔰⚜️🔰⚜️🔰
*பாரத சாரணர்- சாரணியர் இயக்கம் போளூர் கல்வி மாவட்டம்*
🔰⚜️🔰⚜️🔰⚜️🔰⚜️🔰
*முகக் கவசம்*
  Face Mask*
⚛️✳️
அவசியமாக வெளியில் வரும் போது கட்டாயம் *முகக் கவசம்* அணிய வேண்டும்

ஏனெனில் கொரோனா வைரஸ் வாய் மற்றும் மூக்கு வழியே தான் அதிகமாக வைரஸ் கிருமி பரவுகிறது

தன்னை தற்காத்துக் கொள்ள முகக் கவசம் அணிவது அவசியமாகிறது.

*கை கழுவுதல்*
 Hand Wash*
⚛️✳️
இரு கைகளையும் *சோப்பு நீரால் 20 வினாடிகள்* தேய்த்து கைகளை கழுவ வேண்டும்

*சமூக இடைவெளி*
*Maintain Social distance*
⚛️✳️
மக்கள் கூடும் இடங்களில் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்

குடும்ப உறுப்பினராக இருந்தாலும் *1 முதல் 2 மீட்டர் இடைவெளி* கடைபிடிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்

*கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள்*
⚛️✳️
*இருமல், தும்மல், காய்ச்சல்,* உள்ளவரிடம் முற்றிலும் *விலகி* இருக்க வேண்டும்

வைரஸ் தொற்று அறிகுறி இருப்பின் தாமதிக்காமல் *அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றி செயல்பட வேண்டும்

*எச்சில் துப்புவதை                 *தவிர்த்தல்*
 *Do not Spit*
⚛️✳️
*பொது இடங்களில் எச்சில் துப்பும் பழக்கத்தை கைவிட வேண்டும்*

நோய்வாய்பட்ட நுரையீரல் உள்ளவர்கள் துப்புவதில் உள்ள நுண்ணுயிர்கள் காற்றில் கலந்து ஆரோக்கியம் உள்ளவர்களின் சுவாசம் மூலமாக அவர்களின் நுரையீரலை அடைந்து வைரஸ் கிருமி பரவிதாக்கும்.

எனவே எச்சில் *துப்புதலால் தொற்று ஏற்படும்* என்பதை உணர்ந்து அதை தவிர்க்க வேண்டும்.

*அரசு அறிவிப்புகளை மதித்து நடத்தல்*
⚛️✳️
கொரோனா குறித்த பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் வெளியிடும் *வழிகாட்டு நெறிமுறைகளை* பொதுமக்கள் நிறுவனங்கள் பின்பற்றி கடைபிடிக்கவேண்டும்

*சத்தான உணவு முறை*
*immunity System*
⚛️✳️
பதப்படுத்தப்பட்ட மாமிசம் தவிர்க்க வேண்டும் *ஈரப் பதமான குளிச்சியான காய்கறிகளை* அளவோடு பயன்படுத்த வேண்டும்

*ஆவியில் வேக வைத்த* உணவு உட்கொள்ள வேண்டும்

*பாரம்பரிய *கசாய குடிநீர்* , *நீலவேம்புகசாயம்*, *கபசுரக்கசாயம்* குறிப்பிட்டஅளவோடு எடுத்து கொள்ள வேண்டும்

*உள்ளூரில் விளையும் காய்கறிகள் கீரைகள் பழங்கள் பயன்படுத்துவது பாதுகாப்பானது*

மஞ்சல், உப்பு சேர்த்தும் அல்லது வினிகர் ஊற்றி காய்கறிகளை சிறிது நேரம்  கழித்து அலசி எடுத்து தூய்மை செய்து சமையலுக்கு பயன்படுத்த .வேண்டும்
இயற்கையில் கிடைக்கும் மஞ்சள்.ஆரஞ்சு, சிவப்பு, பச்சை நிற காய்கறி மற்றும் பழங்களை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்*

*தொடுதல் கூடாது*
  Do Not touch*
⚛️✳️
உயிருள்ள, உயிரற்ற எந்த பொருளையும் அவசியமின்றி தொடுதல் கூடாது .

*கண், மூக்கு, வாய், தலை*, உள்ளிட்ட உடல் உறுப்புகளை *கைகளால் அடிக்கடி தொடுவதை தவிர்க்க வேண்டும்*

*ஆரோக்கிய சேது*
*Aarogya Setu app*
🔰⚜️
அரசின் மேற்கண்ட செயலியை பதிவிறக்கம் செய்து நோய் *தொற்று உள்ளவரிடம் எச்சரிக்கையாக இருக்கலாம்.*

*வீட்டு ஒதுக்கம்*
*Home Quarantine*
🔰⚜️
தன் உயிரையும், குடும்ப உறுப்பினர்களின் உயிரையும் காக்க ஒவ்வொருவரும் *வீட்டில் தங்கியிருக்க வேண்டும்*.

*தன்னொதுக்கம்* (தனித் திருத்தல் )
*Self Quarantine*
🔰⚜️
வெளி மாவட்டம், மாநிலம், நாடுகளில் இருந்து வருபவர்களை வருவாய் துறை மற்றும் சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவித்து பரிசோதனைக்கு பிறகு குறிப்பிட்ட நாட்கள் *தனித்திருக்க வேண்டும்*

பரிசோதனைக்குப் பின் கொரோனா வைரஸ் தொற்று இருப்பின் *தொற்றொதுக்கம்* - (isolation)மருத்துவரின் பரிந்துரை படி செயல்பட வேண்டும்

*சமூகப் பரவல்*
*Community spread*
🔰⚜️
வைரஸ் தொற்றுநோய் உள்ள பகுதிக்கும்,
தொற்றுநோய் உறுதிபடுத்திய பிறகு அந்தப் பகுதியில் இருந்து வெளியேறுவதும் சமூகப் பரவலுக்கு வழிவகுக்கும்

எனவே மாவட்டம்,மாநிலம், நாடுகளில் உள்ளவர்கள் வெளியேறவும்,
உள்ளே நுழையவும் தடை செய்து அவர்களை குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்த (ஒதுக்கம் ) Quarantine செய்ய வேண்டும். வெளிநாடு மாநில சுற்றுலா செல்வதை சிறிது காலம் தவிர்க்க வேண்டும்.

*கழிப்பிடத் தூய்மை*
*Clean Toilet*
🔰⚜️
பொது கழிப்பிடத்தை* 1 மணி நேரத்திற்கு ஒரு முறை கிருமி நாசினியால் தூய்மைப்படுத்த வேண்டும்*

*கழிப்பிடம் ஈரப்பதமின்றி இருக்குமாறு* பார்த்து கொள்ள வேண்டும். முடிந்த வரை தூய்மையற்ற பொதுக்கழிப்பிடத்தை தவிர்க்க வேண்டும்.

*கூடுதல் வேண்டாம்*
🔰⚜️
சமூக விழாக்கள், இறை வழிபாட்டு நிகழ்வு , பொதுக் கூட்டம், விருந்து, சந்தை, உணவகம், எல்லா நிலையங்களிலும் சமூக இடைவெளி அவசியம் தேவை

அதை கட்டுபாட்டோடு கடைபிடிப்பது சமூக சுய ஒழுக்கமாகும்.

அதே போன்று பொது இடங்களில் புகையும்,
மதுவும் நோய் பரவல் ஏற்பட வழிவகுக்கும் அதை
தவிர்க்க வேண்டும்.

*உடல் மற்றும் மன நல மேலாண்மை*
🔰⚜️
வீட்டிலேயே உடற்பயிற்சி, யோகா , இசை,பாடல்கள் கேட்பது  கதைகள், கட்டுரைகள் புத்தகங்கள் வாசித்தல், நூல் எழுதுவது, ஓவியம், Craft மூலிகைச் செடிகளை வளர்த்தல் என மேலும் பலவற்றால் உடல் மற்றும் மனதை அழுத்தமின்றி துடிப்பாக வைத்துக் கொள்ள முன்திட்டமிடுதல் வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை எதிர்கொண்டு சுயகட்டுப்பாட்டோடு எச்சரிக்கையோடு
வாழ பழகிக்கொள்ள வேண்டும்

*மத்திய மாநில அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்*
🔰⚜️

ஊரடங்கு, பொதுமுடக்கம், கட்டுப்பாடு பகுதிகள் மற்றும் 144 தடைகள் கொரோனா தொற்று பரவலை பொறுத்து எப்போது வேண்டுமானாலும் அரசால் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம்

அதை மதித்து பொது இடத்தில் கூடாமல் இருக்க வேண்டும்.

நோய் தடுப்பு மருந்துகள் கண்டறிய சில காலம் ஆகலாம்

எனவே மேற்கண்ட கருத்துக்களை நடைமுறை வாழ்வின் ஓர் அங்கமாக்கிக் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்

*எதிர்வரும் காலம் சவாலானது தான்* என்றாலும் சில நெறிகளை பின்பற்றி கொரோனாவை வெல்வோம்
🔰⚜️🔰⚜️🔰⚜️🔰⚜️🔰
*விழித்திரு*......
*தனித்திரு* ...................
*விலகியிரு* ..........................
*வீட்டிலிரு* ............................................
*விழிப்பாயிரு*...........................

🟠
*கொரோனா (Pandamic)*

உலக வைரஸ் கிருமிதொற்றுபரவலை தடுப்போம். *வெல்வோம்*
✳️✴️⚛️✳️⚛️✴️✳️⚛️✳️
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
☸️✳️☸️✴️⚛️☸️✴️⚛️✳️
*M.தட்சணாமூர்த்தி*
*மாவட்ட செயலாளர்*
*பாரத சாரணர் சாரணியர் இயக்கம்*
*போளுர் கல்வி       மாவட்டம்*
🔰⚜️✴️🔰⚜️🔰✴️🔰⚜️
அதுவே முழுமையான பாதுகாப்பு

கண்ணில் தென்படாத வைரஸ் எங்கும் காத்திருக்கலாம் வீட்டிலிரு, எங்கும் விலகியே இரு

No comments:

Post a comment