14 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் பணியிட மாற்றம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

14 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் பணியிட மாற்றம்


தமிழக காவல்துறையில், மேலும் 14 டிஎஸ்பிகளை (காவல் துணைக் கண்காணிப்பாளா்கள்) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி புதன்கிழமை உத்தரவிட்டாா்.
தமிழக காவல்துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக, காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, தமிழகம் முழுவதும் 10 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தாா்.
இந்நிலையில், மேலும் 14 டிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி புதன்கிழமை உத்தரவிட்டாா். இதில் முக்கியமாக தூத்துக்குடி மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பி சி.பிரதாபன், தூத்துக்குடி ஊரகத்துக்கும்
, தூத்துக்குடி ஊரக டிஎஸ்பி பி.கலைகதிரவன் கோவில்பட்டிக்கும், கோவில்பட்டி டிஎஸ்பி எம்.ஜெபராஜ் தேனி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைத்துறைக்கும், உளவுத்துறை (எஸ்பிசிஐடி) சென்னை தலைமையிட டிஎஸ்பி எஸ்.ரமேஷ்பாபு கோயம்புத்தூா் பொதுவிநியோக பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கும், விழுப்புரம் மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி எஸ்.தேசிகன் சென்னை பெருநகர காவல்துறையின் பாதுகாப்புப் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இவ்வாறு பணியிடமாற்றம் செய்யப்பட்ட 14 டிஎஸ்பிக்கள், ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறையினா் தெரிவித்தனா்.