125 மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய்1,80,000 மதிப்புள்ள அரிசி மளிகை பொருட்கள் வழங்கிய பள்ளி ஆசிரியர்கள் - ஆசிரியர் மலர்

Latest

08/05/2020

125 மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய்1,80,000 மதிப்புள்ள அரிசி மளிகை பொருட்கள் வழங்கிய பள்ளி ஆசிரியர்கள்


*பள்ளி மாணவர்களின் குடும்பங்கள், வயதான, ஆதரவற்ற பெண்கள், சுகாதாரப்பணியாளர்கள், கண்பார்வை அற்றோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி சார்பாக ₹.1,80,889 மதிப்புள்ள பொருட்கள் மற்றும் உதவி தொகை வழங்கல் *


திருச்சி மாவட்டம், தென்னூர், *சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில்* படிக்கும் அனைத்து மாணவர்களின் குடும்பங்களுக்கும் இன்று (7-5-2020) அத்தியாவசிய மளிகைப் பொருட்கள்  (₹.641.75) மற்றும் ரொக்கம் ₹.500 அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.  பொருட்கள் வழங்கப்படும் போது அரசின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப சமூக இடைவெளியிடனும்,  முக கவசம் அணிந்தும்,  கிருமி நாசினி திரவம் கொண்டு கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர் பொருட்கள் தொகுப்பு *125 குடும்பங்களுக்கு* வழங்கப்பட்டது.
இத் தொகுப்பில் அரிசி ஐந்து கிலோ , துவரம் பருப்பு , சர்க்கரை , கோல்டுவின்னர் எண்ணெய், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள்
, சாம்பார் தூள் , மல்லித்தூள் , டீ தூள் , வெந்தயம் , சோம்பு , சீரகம் , கடுகு , சால்ட் உப்பு,  கோதுமை , விம்சோப்பு , ரின் சோப்பு, ரவை , மிளகாய் , கொண்டகடலை உட்பட் 20 பொருள்கள் இருந்தன .  மேற்கண்ட மளிகைப்பொருட்கள் தலைமையாசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள் பங்களிப்புடனும், ShineTREEchy அமைப்பு மூலமாகவும் இணைந்து *ரூ.641.75 மதிப்புள்ள மளிகைப்பொருட்கள் தொகுப்பு 125 குடும்பங்களுக்கு ரூ.80,219 மதிப்பில் வழங்கப்பட்டது.*

*மேலும் தலைமையாசிரியர் அவர்களின் சொந்த பணத்தில் இருந்து குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.500 வீதம் ரொக்கமாக 125 மாணவர்களின் குடும்பங்களுக்கு (₹.62500) வழங்கப்பட்டது.*

முதல் கட்டமாக தலைமையாசிரியர் சார்பில் 125 குடும்பங்களுக்கும்  ரூ.100 மதிப்புடைய காய்கறிகள் பை + தன்னார்வலர் வழங்கிய ரூ.50 மதிப்புள்ள பேரிச்சை ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.  *இதன் மொத்த மதிப்பு ₹.12,500 ஆகும்.*


மேலும் பள்ளி சாராத இதர பயனாளிகள் , வயதான, ஆதரவற்ற பெண்கள் , சுகாதார பணியாளர் உள்ளிட்ட 15 குடும்பத்திற்கு இன்று அரிசி மற்றும் மளிகை பொருட்கள்  அவரவர் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டது
.   *இதன் மொத்த மதிப்பு ₹.9,626 ஆகும்.*

இதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டம் ,  சிறுமலை மலைப்பகுதியில் வசிக்கும் ஆதரவற்ற கண் பார்வை அற்ற *25 குடும்பங்களுக்கு தொகுப்பு ஒன்று ரூ.641.75 வீதம் ரூ.16,044* மதிப்பிலான பொருள்கள் தன்னார்வலர்கள் உதவியுடன் திரட்டப்பட்டு இன்று வழங்கப்பட்டது.  இப்பொருட்களை அங்கு கொண்டு சேர்க்கும் திரு. ஜோசப் அவர்களிடம் அப்பொருட்கள் நேரில் வழங்கப்பட்டன. 


இந்நிகழ்வில் மணப்பாறை சிப்காட் வட்டாட்சியர் திரு.  கோகுல்,  ShineTREEchy அமைப்பின்  நிறுவனர் திரு. மனோஜ் தர்மர், பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன் , வார்டு 50ன் மாநகராட்சி மேற்பார்வையாளர் திரு. நாகராஜ், பள்ளி ஆசிரியை சகாயராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆக *இன்று பள்ளி சார்பில் வழங்கிய பொருட்கள் மற்றும் உதவி தொகை சேர்த்த மொத்த மதிப்பு ரூ.1,80,889 ஆகும்*.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459