10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்குமா ? நடக்காதா? - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்குமா ? நடக்காதா?


கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு
ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இத்தேர்வு வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று (மே 12) அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள தற்போதைய சூழலில்,
பொதுத் தேர்வை நடத்தக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து..! – அமைச்சர் செங்கோட்டையன்
இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் எனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில்
பொதுநல வழக்கு
தாக்கல் செய்யப்ட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள இந்த பொதுநல வழக்கில், “தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
இந்த நிலையில், பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு
போதிய வசதிகள் ஏற்படுத்த அரசு தரப்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: சிஇஓ-க்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!!
இந்த நிலையில், தேர்வு நடத்தப்பட்டால், தேர்வெழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு வார வாய்ப்பு உள்ளது” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.