இந்தியாவும், ரஷ்யாவும் வேண்டும்.. டிரம்ப் உருவாக்கும் 10 நாடுகளின் மாஸ் டீம்.. சீனாவை ஒடுக்க பிளான்! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

இந்தியாவும், ரஷ்யாவும் வேண்டும்.. டிரம்ப் உருவாக்கும் 10 நாடுகளின் மாஸ் டீம்.. சீனாவை ஒடுக்க பிளான்!-|: ,31, 2020, சென்னை: இந்தியாவும், ரஷ்யாவும் ஜி7 நாடுகளில் இணைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் என்று கூறி இருப்பது மிக பெரிய அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் எப்போது என்ன அறிவிப்பை வெளியிடுவார், சீனாவை எப்படி நெருக்கவார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. இரண்டு நாட்கள் முன்புதான் உலக சுகாதார மையத்துடன் உறவை துண்டிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதோடு சீனாவை சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்கா வர தடை விதித்தார். அமெரிக்காவில் இருக்கும் சீன நிறுவனங்களை கண்காணிக்க போவதாகவும் அறிவித்துள்ளார். இந்தியாவை அழைக்க முடிவு.. ஜி7 மாநாட்டை செப்டம்பருக்கு ஒத்தி வைத்தார் அதிபர் டொனால்ட் டிரம்ப்தீவிர கண்காணிப்புஅதோடு சீனாவில் இருக்கும் ஹாங்காங்கிற்கு சிறப்பு அந்தஸ்துகளை வழங்கியதை ரத்து செய்கிறேன் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு சீனாவிற்கு எதிரான சிறு சிறு தடையாக பார்க்கப்படுகிறது. ஆனால் இது வெறும் டிரெய்லர்தான் என்கிறார்கள். சீனாவிற்கு எதிராக பெரிய பொருளாதார தடைகளை அல்லது அறிவிப்புகளை டிரம்ப் கொண்டு வருவார் என்றும் கூறுகிறார்கள்.இன்று அறிவிப்புஇந்த நிலையில்தான் இன்று புதிய திருப்பமாக இந்தியாவும், ரஷ்யாவும் ஜி7 நாடுகளில் இணைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் என்று கூறி உள்ளார். அதோடு ஆஸ்திரேலியாவும் இந்த பட்டியலில் இணைய வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஜி7 குழு மிகவும் பழமையான குழுவாக மாறிவிட்டது. அதனால் அவர்களின் அடுத்த கூட்டத்தை இப்போது நடத்த கூடாது. இதை இன்னும் வலுவாக்க வேண்டும்.ஜி7 நாடுகள்உலகில் என்ன நடக்கிறது என்பதை ஜி7 நாடுகள் பெரிய அளவில் பிரதிபலிக்கவில்லை. இதனால் இந்த குழுவில் மேலும் முக்கிய நாடுகளை இணைக்க வேண்டும். இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, ரஷ்யாவை சேர்க்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஜி7 என்பதுஆகும். இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளது. இதில்தான் இந்தியா,ரஷ்யாவை சேர்க்க டிரம்ப் முயன்று வருகிறார்.காரணம் உள்ளதுஇந்த குழுவில் இந்த மூன்று நாடுகளை சேர்க்க நிறைய காரணம் இருக்கிறது. சீனாவை எதிர்க்கும் வகையில் டிரம்ப் இப்படி செய்கிறார் என்கிறார்கள். ஜி7 நாடுகள் + இந்த மூன்று நாடுகள் என்று 10 நாடுகளை சீனாவிற்கு எதிராக டிரம்ப் திரட்ட பார்க்கிறார். ஏற்கனவே நேட்டோ படைகள் அமெரிக்காவிற்கு உதவ தயாராக இருக்கிறது. அதேபோல் இன்னொரு பக்கம் அமெரிக்காவிற்கு ஆதரவாக ஜி10 நாடுகளும் இருக்கிறது.இந்தியா ஏன்?இதில் இந்தியாவை சேர்க்க என்ன காரணம் என்று சொல்ல தேவையில்லை. இந்தியாவும் அமெரிக்காவை போலவே சீனாவை எதிர்த்து வருகிறது. முக்கியமாக சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையில் கடுமையான சண்டை நடந்து வருகிறது. எல்லையில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் நிலை உள்ளது. அதேபோல் அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமாக இருப்பதால் ஜி7 குழுவில் இந்தியாவை சேர்க்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முயன்று வருகிறார்.
ஆஸ்திரேலியா ஏன் ?இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியா சீனா மீது கடும் கோபத்தில் இருக்கிறது.கொரோனாவால் உலகிலேயே மிக மோசமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மொத்த ஜிடிபியில் ஏற்கனவே 22% இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி ஆஸ்திரேலியா நிறுவனங்களை சீனா வளைத்து போட முயற்சித்து வருகிறது. இதனால் சீனாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே வர்த்தக சண்டை நடந்து வருகிறது.தென் சீன கடல் எல்லைஅதேபோல் இன்னொரு பக்கம் தென் சீன கடல் எல்லையில் அமெரிக்காவும் சீனாவும் சண்டை போட்டு வருகிறது. இந்த சண்டையில் ஆஸ்திரேலியாவும் களமிறங்கி உள்ளது. தென் சீன கடல் எல்லைக்கு ஆஸ்திரேலியா போர் கப்பல்களை அனுப்பி உள்ளது. அங்கு ஆஸ்திரேலியா அமெரிக்காவிற்கு ஆதரவாக நிற்கிறது. இதனால் சீனாவிற்கு எதிராக ஜி7 நாடுகளில் ஆஸ்திரேலியாவை சேர்க்க டிரம்ப் முயன்று வருகிறார்.ரஷ்யா நிலைஇதில் ரஷ்யாவின் வருகை பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கலாம்.
ஆனால் டிரம்ப் சீனாவுடன் சண்டை போட தொடங்கியதில் இருந்தே ரஷ்யாவுடன் நெருக்கமாகி வருகிறார். சீனாவிற்கு நெருக்கமான ஒரே நாடு ரஷ்யாதான் என்பதால் அதை தங்கள் பக்கம் இழுக்க அமெரிக்கா முயன்று வருகிறது. ரஷ்யாவை தங்கள் பக்கம் கொண்டு வந்தால் சீனாவை எளிதாக எதிர்க்கலாம் என்று டிரம்ப் நினைக்கிறார். இதனால் ரஷ்யாவை தற்போது ஜி7 குழுவில் இணைக்க முயன்று வருகிறார்.ரஷ்யா என்ன செய்யும்அதேபோல் ரஷ்யாவும் கூட ஜி7 குழுவில் இணைய வாய்ப்புள்ளது. இதனால் ரஷ்யா ஏற்றுமதியை அதிகரிக்க முடியும். அதேபோல் தனது பொருளாதார சீர்குலைவை சரி செய்ய முடியும். அமெரிக்காவுடன் இன்னும் நெருக்கம் ஆக முடியும் என்று கூறுகிறார்கள். சீனாவா, ஜி7 நாடா என்று பார்த்தால் கண்டிப்பாக ஜி7 நாடுகளைத்தான் ரஷ்யா தேர்வு செய்யும் என்கிறார்கள். இது சீனாவிற்கு பாதிப்பாக அமையும். இதில் தென் கொரியாவை இணைக்கவும் டிரம்ப் யோசித்து வருகிறார்

  • .பொருளாதார ரீதியான தாக்குதல்இப்படி 10 நாடுகளை ஒன்று கூட்டி சீனாவிற்கு எதிராக டிரம்ப் போருக்கு செல்ல மாட்டார். ஆனால் சீனாவை பொருளாதார ரீதியாக டிரம்ப் நெருக்குவார். அதோடு சீனா மீது பொருளாதார ரீதியான தடைகளை விதிப்பார். சீனாவை பொருளாதாரா ரீதியாக மொத்தமாக முடுக்குவதே டிரம்பின் நோக்கம். இதற்காக அவர் எதையும் செய்வார், எவ்வளவு தூரமும் செல்வார் என்கிறார்கள்

No comments:

Post a comment