கல்விக்கட்டணங்கள் 100% திருப்பி அளிக்கப்படும் திட்டம் : ஜெகன் மோகன் அதிரடி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Sunday, 3 May 2020

கல்விக்கட்டணங்கள் 100% திருப்பி அளிக்கப்படும் திட்டம் : ஜெகன் மோகன் அதிரடி


ஐதராபாத்: கொரோனா பாதிப்பால் நாடே அவதியுறும் நிலையில், இன்ஜினியரிங் உட்பட உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணங்கள், 100% திருப்பி அளிக்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
கல்வி கட்டணத்தை ரத்து செய்ய ‘ஜெகனண்ணா வித்யா தீவெனா’
எனும் திட்டத்தை துவங்கி வைத்த முதல்வர் ஜெகன் கூறியதாவது: எந்த அரசும் கல்விக் கட்டணத்தை இந்த அளவுக்கு திருப்பி அளித்ததில்லை. இதற்காக 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசு செயல்பட்ட காலத்தில், மிச்சமிருந்த தொகையை வழங்கவும், எங்கள் அரசு சார்பில், ரூ.1,880 கோடியை விடுவித்து உத்தரவிட்டுள்ளோம்.
தேவையுள்ள மற்றும் ஏழை மாணவர்களுக்குக் கல்வி சாத்தியம் ஆக வேண்டும். குழந்தைகளுக்குக் கொடுக்க முடிகிற ஆகச் சிறந்த செல்வம் கல்வி. அதை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இத்திட்டத்தின் மூலம் ஆந்திராவில் உள்ள சுமார் 12 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்