10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு நடத்த என்ன விதிமுறை ? முக்கிய அம்சங்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




21/05/2020

10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு நடத்த என்ன விதிமுறை ? முக்கிய அம்சங்கள்



பெருமளவிலான மாணவர்களின் கல்வி நலன்களைக் கருத்தில் கொண்டு, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்குத் தேர்வு நடத்துவதற்கான செயல்பாடுகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அறிவிப்பின் வருமாறு:
* பள்ளி இறுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று மாநில அரசுகள் மற்றும் சிபிஎஸ்இ-யிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
* இவற்றைக் கருத்தில் கொண்டு, தேர்வுகளை நடத்துவதற்கான நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
· கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில், தேர்வு மையங்கள் வைக்க அனுமதி கிடையாது.

· ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயமாக முகக்கவச உறை அணிந்திருக்க வேண்டும்.
· தேர்வு மையங்களில் உடல் வெப்பத்தைக் கண்டறியும் தெர்மல் ஸ்கேன் வசதி மற்றும் கிருமிநாசினி வசதி இருக்க வேண்டும்.
* அனைத்துத் தேர்வு மையங்களிலும் தனி நபர் இடைவெளி நடைமுறை கடைபிடிக்கப்பட வேண்டும்.!
· பல்வேறு வாரியங்கள் தேர்வுகளை நடத்த வேண்டியிருப்பதைக் கருத்தில் கொண்டு, அதற்கான கால அட்டவணைகளை இடைவெளி விட்டு அமைத்துக் கொள்ள வேண்டும்.
· மாணவர்கள் தேர்வு மையத்துக்குச் செல்வதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சிறப்புப் பேருந்து ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459