முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வின்றி இன்டர்னல் மதிப்பெண்களை கொண்டு கிரேடு வழங்கலாம் - UGC - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Wednesday, 29 April 2020

முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வின்றி இன்டர்னல் மதிப்பெண்களை கொண்டு கிரேடு வழங்கலாம் - UGC


பல்கலைகழக மானியக்குழு புது தில்லி: நாடு முழுவதும் ஜூலை மாதம் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த பல்கலைகழக மானியக்குழு (யூஜிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 31,332 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 1,007 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு  முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, தற்போது மே மாதம் 3-ஆம் தேதி வர நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரனமாக பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. அதேசமயம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாடு முழுவதும் ஜூலை மாதம் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த பல்கலைகழக
மானியக்குழு (யூஜிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக யூஜிசி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘’கல்லூரி ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்தலாம் என்றும், முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வின்றி அக மதிப்பீட்டு (இன்டர்னல்) மதிப்பெண்களை கொண்டு கிரேடு வழங்கலாம்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.