நீட் தேர்விலிருந்து சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பது சார்பான தீர்ப்பு வெளியீடு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Wednesday, 29 April 2020

நீட் தேர்விலிருந்து சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பது சார்பான தீர்ப்பு வெளியீடு


புதுடில்லி: நீட் தேர்விலிருந்து சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவன உரிமைகளை பறிக்கும் வகையில், நீட் தேர்வு இருப்பதாக வேலூர் சி.எம்.சி., மருத்துவக் கல்லூரி
நிர்வாகம் உள்ளிட்ட சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் அந்தந்த மாநில ஐகோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்திருந்தது. ஐகோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் எனவும், மனுக்கள் அனைத்தையும் ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து மனுக்கள் அனைத்தும் 2012ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,
சுப்ரீம் கோர்ட் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில், நீட் தேர்விலிருந்து சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க முடியாது என உத்தரவிட்டது.
நீதிபதிகள் உத்தரவில் கூறியதாவது: நாட்டின் நலனை மேம்படுத்த
, மருத்துவ கல்வி தரமுடன் இருக்க வேண்டும். இதில் எந்தவித சமரசமும் இருக்கக் கூடாது. மருத்துவ படிப்பு வியாபாரம் ஆக்கப்படுவதை தடுக்க நீட் தேர்வு கட்டாயம். சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் நீட் தேர்வு இல்லை. எனவே நீட் தேர்வில் இருந்து சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க முடியாது. இவ்வாறு உத்தரவிட்டனர்.