கொரோன வைரசுக்கு PF பணத்தை எப்படி withdraw செய்வது ? படங்களுடன் செய்முறை விளக்கம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

கொரோன வைரசுக்கு PF பணத்தை எப்படி withdraw செய்வது ? படங்களுடன் செய்முறை விளக்கம்


கொரோனா வைரஸைக் காரணம் காட்டி PF பணத்தில் எவ்வளவு ரூபாய் வரை எடுக்கலாம், அதை எப்படி கணக்கிடுவார்கள் என்பதை முன்பே விளக்கி இருக்கிறோம்.
சரி இப்போது இந்த கொரோன வைரஸை காரணம் காட்டி PF பணத்தை எப்படி withdraw செய்யலாம் அல்லது PF Claim செய்வது என விரிவாகப் பார்ப்போம்.


ஸ்டெப் 1

ஸ்டெப் 1

1.
2. இதில் வலது பக்கத்தில் Member e-Sewa எனக் குறிப்பிட்டு இருக்கும் இடத்தின் கீழ் லாக் இன் செய்யவும். UAN – Universal Account Number & உங்கள் பாஸ்வேர்ட், கேப்சா கொடுத்த பின் சைன் இன் செய்யவும்.


ஸ்டெப் 2

ஸ்டெப் 2

1. லாக் இன் செய்த பின் மேலே காட்டி இருப்பது போல ஒரு பேஜ் ஓப்பன் ஆகும்.
அதில் Online Services என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
2. அதில் Claim (Form-31, 19, 10C & 10D) என்பதை க்ளிக் செய்யவும். இந்த லிங்கை க்ளிக் செய்த பின் இன்னொரு பேஜ் ஓப்பன் ஆகும்.


ஸ்டெப் 3

ஸ்டெப் 3

1. Online Claim (Form 31, 19, 10C & 10 D) பக்கத்தில், நீங்கள் EPFO அலுவலகத்துக்கு, கொடுத்து இருக்கும் உங்கள் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், ஆதார் விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் எல்லாம் இருக்கும். அதை ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
2. அதன் பின், BANK ACCOUNT No. (As seeded against UAN) என்கிற கட்டத்துக்கு நேராக, நீங்கள் EPFO அமைப்பிடம் கொடுத்து இருக்கும் வங்கிக் கணக்கு எண்ணை சரியாக குறிப்பிட்டு Verify செய்து கொள்ளுங்கள்.


ஸ்டெப் 4


ஸ்டெப் 4

1. வங்கிக் கணக்கை சரி பார்த்த பின், ஒரு பாப் அப் வரும். அதில் Warning(s) – Certificate of Undertaking என ஒரு எச்சரிக்கை வரும்.
அதில் சொல்லப்பட்டு இருக்கும் விஷயம்
1. எண் வங்கிக் கணக்கை சரி பார்த்துவிட்டேன், என் க்ளெய்ம் தொகை, இந்த வங்கிக் கணக்குக்குத் தான் வரும் என்பதை புரிந்து கொள்கிறேன்.

2. எண் பழைய பிஎஃப் கணக்குகள் இந்த UAN உடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. EPFO அமைப்பு, நான் இந்த க்ளெய்ம் பெற தகுதியானவரா என்பதை முடிவு செய்யும், அதே போல & என் க்ளெய்ம் தொகை எவ்வளவு என்பதையும் EPFO முடிவு செய்யும் என்பதை நான் அறிவேன். எனவே அதற்கு ஏற்றாற் போல, என் க்ளெய்ம் தொகையை EPFO அமைப்பு கொடுக்கும் அல்லது மறுக்கும்.
எனச் சொல்லி இருப்பார்கள். இதற்கு Yes கொடுங்கள். பாப் அப் மறைந்துவிடும். அதே பக்கத்தில், கடைசியில் Proceed For Online Claim என்பதை க்ளிக் செய்யுங்கள்.


ஸ்டெப் 5

ஸ்டெப் 5

1. மேலே வழக்கம் போல உங்கள் விவரங்களைக் கொடுத்து இருப்பார்கள். கடைசியாக I want to Apply for என்கிற கட்டத்தில் PF Advance (Form 31) என தேர்வு செய்யுங்கள். இதை தேர்வுச் செய்த பின் மேற்கொண்டு விவரங்களைக் கேட்கும்.
2. அதன் பிறகு Purpose for which Advance is required என்கிற காலத்தில் Outbreak of Pandemic (Covid-19) என்பதை தேர்வு செய்யுங்கள்.
3. உங்களுக்குத் தேவையான பணத்தை குறிப்பிடுங்கள். (ஒரு நபருக்கு அதிகபட்சம் எவ்வளவு ரூபாய் எடுக்க முடியும் என்பதை மேலே கொடுத்த கட்டுரை லிங்கில் விளக்கி இருக்கிறோம்)
.
4. அதன் பின் முகவரியை குறிப்பிடுங்கள்.


ஸ்டெப் 6

ஸ்டெப் 6

1. அதே பக்கத்தில், உங்கள் வங்கியில் பாஸ் புத்தகம் (Pass Book) அல்லது காசோலை (Cheque) புத்தகத்தை அப்லோட் செய்யவும். இந்த விவரம் மிகத் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். இல்லை என்றால் க்ளெய்ம் நிராகரிக்கப்படலாம்.
2. கீழே I am Applying for this… என ஒரு செக் பாக்ஸ் இருக்கும் அதைப் படித்துப் பார்த்துவிட்டு டிக் செய்யவும்.


ஸ்டெப் 6 தொடர்ச்சி

ஸ்டெப் 6 தொடர்ச்சி

3. அதன் பின் ஆதார் கார்டுடன் இணைத்து இருக்கும் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அந்த ஓடிபியை Enter OTP காலத்தில் நிரப்பி submit கொடுக்கவும். ஓடிபி verify செய்த பின் “OTP has been verified, eKYC updated and PF advance claim for submitted successfully on Unified portal. Please CLICK HERE to view PDF” என ஒரு செய்தி வரும்.
4. அதில் click here-ஐ அழுத்தினால் நம் விண்ணப்பம் டவுன்லோட் செய்து கொள்ள முடியும்
.


ஸ்டெப் 7 செக் செய்தல்

ஸ்டெப் 7 செக் செய்தல்

1. மீண்டும் நீங்கள் லாக் இன் செய்து ஸ்டெப் 5-ல் சொல்லப்பட்டு இருப்பது போல I want to apply for என்கிற கட்டத்துக்கு நேராக PF Advance (Form-31)-ஐ க்ளிக் செய்தால் “Your Previous Claim is Pending already, Pleas track Claim Status CLICK ME என கீழே ஒரு வாசகம் வரும்.


ஸ்டெப் 8 Click Me

ஸ்டெப் 8 Click Me

அந்த பச்சை நிறத்தில் இருக்கும் CLICK Me-யை சொடுக்கினால்,
1. உங்கள் க்ளெய்ம் டிராக்கிங் ஐடி,
2. சமர்பித்து இருக்கும் விண்ணப்ப வகை,
3. சமர்பித்த தேதி & நேர விவரங்கள்,
4. க்ளெய்ம் ஸ்டேட்டஸ்,
5. நம் விண்ணப்பத்தில் PDF லிங்க் என எல்லாமே கிடைக்கும்.


பயன்படுத்திக் கொள்ளுங்கள்

பயன்படுத்திக் கொள்ளுங்கள்

உண்மையாகவே, கொரோனா வைரஸால் பாதிப்பு இருக்கிறது, சம்பளம் வருவது சிரமம் தான் என்பவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
. தேவை இல்லாமல் PF-ல் இருந்து காசை வெளியே எடுத்து செலவழிக்க வேண்டாம்.
குறிப்பு: மேலே சொன்ன வழிமுறைகளைச் செய்ய
1. முன்பே UAN activate செய்து இருக்க வேண்டும்.
2. ஆதார் எண்ணை UAN எண்ணுடன் இணைத்து இருக்க வேண்டும்.
3. அதே போல IFSC கோட் உடன், ஒரு வங்கிக் கணக்கையும் UAN உடன் இணைத்து இருக்க வேண்டும்.