ஆரோக்கிய சேது மற்றும் IVRS செயலிகளைக் கல்வித்துறை அதிகாரிகள், பணியாளர்கள் கட்டாயம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Wednesday, 22 April 2020

ஆரோக்கிய சேது மற்றும் IVRS செயலிகளைக் கல்வித்துறை அதிகாரிகள், பணியாளர்கள் கட்டாயம்


கொரோனா வைரஸ் பரவலைக் கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்கிய சேது மற்றும் IVRS செயலிகளைக் கல்வித்துறை அதிகாரிகள், பணியாளர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறைத் துணைச் செயலாளர் வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளிக் கல்வித்துறை, தனியார் பள்ளிகள் இயக்ககம், தேர்வுத்துறை, தொடக்கக் கல்வி இயக்ககம், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்,
பாடநூல் கழகம், பொது நூலகத்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம் என அனைத்து இயக்ககங்களும் தனித்தனியாக ஆரோக்கிய சேது மற்றும் IVRS செயலிகளுக்கு மண்டல அலுவலர்களை நியமிக்க ஆணையிட்டுள்ளது. மண்டல அலுவலர்களை நியமித்து, அது தொடர்பான விவரங்களைத் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.