உங்கள் மொபைலில் GCE Monitoring app இருக்கா? - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

உங்கள் மொபைலில் GCE Monitoring app இருக்கா?சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அறிந்துகொள்ள சென்னை மாநகராட்சி புதிய மொபைல் செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜிசிஇ மானிட்டரிங் (GCE Monitoring) என்ற இந்த மொபைல் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். செயலியை டவுன்லோடு செய்தவுடன் உங்களது மொபைல் எண்ணை உள்ளீடு செய்து தொடர்ந்து தகவல்களை காண முடியும். 
சென்னையில் மொத்தம் 80 பாதிக்கப்பட்ட பகுதிகள் இந்த செயலில் கூகுள் வரைபடம் மூலமாக காட்டப்படுகின்றன. மேலும், மண்டல வாரியாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிகையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ராயபுரத்தில் 26 பகுதிகள், திருவொற்றியூர் மண்டலத்தில் 6, அண்ணா நகரில் 12, திருவிக நகரில் 5, தேனாம்பேட்டையில் 8 பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் காவல்துறையினர் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.