முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை எவ்வளவு தொகை சேர்ந்துள்ளது ? - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை எவ்வளவு தொகை சேர்ந்துள்ளது ?கரோனா தடுப்பு பணிக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.134 கோடி வந்துள்ளது என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கரோனா தடுப்பு பணிகளுக்காக தொழிலதிபர்கள், திரையுலகப் பிரபலங்கள் தன்னார்வலர்கள், பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதியை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ. 134 கோடி வந்துள்ளதாக தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 134 கோடியே 63 லட்சத்து 54 ஆயிரத்து 364 ரூபாய் வந்துள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், போக்குவரத்துத்துறை ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர். இதன் மதிப்பு 14 கோடியே 10 லட்சத்து 72 ஆயிரத்து 492 ரூபாய். மேலும், பல்வேறு தனியார் நிறுவனங்கள், திரையுலகப் பிரபலங்கள், தன்னார்வலர்கள் பலர் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, நிதியுதவி அளித்துள்ளனர். அதன் விபரங்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.