சூரிய ஒளி கரோனா வைரஸை விரைவாக அழிக்கிறது -அமெரிக் விஞ்ஞானிகள் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

சூரிய ஒளி கரோனா வைரஸை விரைவாக அழிக்கிறது -அமெரிக் விஞ்ஞானிகள்


வாஷிங்டன்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் தொழில்நுட்ப துணை செயலாளர் வில்லியம் பிரையன் கூறியதாவது:-
மேற் பரப்புகளில் படிந்துள்ள வைரஸ்களையும், காற்றில் உள்ள வைரஸ்களையும் சூரிய ஒளி அழித்துவிடும்
திறன் பெற்றது. சூரிய ஒளியின் புறஊதாக் கதிர்கள், வைரஸ்களின் மரபணுப் பொருள்களை சேதப்படுத்தி, அவை பல்கிப் பெருகும் திறனை முடக்கிவிடும்.

எனவே வெப்பம் மற்றும் ஈரப்பதம் அல்லது இரண்டுமே அதிகரிப்பது வைரசுக்கு உகந்தது அல்ல தேசிய உயிரிபாதுகாப்பு
ஆய்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறினார்
 இந்த ஆய்வறிக்கை இன்னும் வெளியிடப்பட்டு, வேறு பிற விஞ்ஞானிகளால் இன்னும் வெளிமதிப்பீடு செய்யப்படவில்லை. சூரிய ஒளி
, வெப்பம், ஈரப்பதம் ஆகியவை கொரோனா வைரஸ் அழிப்பை விரைவுபடுத்தும் என்றாலும், வரும் கோடை காலத்தில் வைரஸ் முற்றாக அழிந்துவிடும் என நினைத்து தற்காப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிட்டு விடக் கூடாது என்று அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.