அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்க 52 ஆயிரத்தை கடந்தது - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Saturday, 25 April 2020

அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்க 52 ஆயிரத்தை கடந்தது


அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், 24 மணி நேரத்தில் 40 ஆயிரம் பேருக்கு புதிதாக நோய்த் தொற்று
ஏற்பட்டிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரசின் மையப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் நேற்று மட்டும் ஆயிரத்து 800க்கும் அதிகமான மக்கள் நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 37 ஆயிரம் பேர் புதிதாக தொற்று நோய் ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 23 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இவர்களில் 15 ஆயிரம் பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் இத்தாலியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த 150 மருத்துவர்கள், நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.ஊரடங்கு காரணமாக கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏர் பிரான்ஸ் கே எல் எம் நிறுவனத்திற்கு அந்த நாடு இந்திய மதிப்பில் 57 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்கியுள்ளது.
உலக அளவிலான தடுப்பூசி மருந்துக்கான மாநாடு ஜூன் 4ம் தேதி இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் கொரோனா நோய்க்கான தடுப்பூசி குறித்தும், வரும் காலங்களில் பரவாமல் தடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது
. இந்த நிலையில் ஊரடங்கின் போது ஏற்பட்ட குடும்பச் சண்டையின் காரணமாக 4 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதித்து வீடுகளில் இருப்பவர்களுக்கு ட்ரோன் மூலம் மருந்துகள் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவத்துத் துறை அமைச்சர்
கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.
நோய்த் தொற்றலின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் வென்டிலேட்டர்களை ஈக்குவார், எல் சால்வடார் மற்றும் ஈக்குவடார் நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.ரமலான் மாதத்தை முன்னிட்டு மலேசியாவில் ஊரடங்கு காலத்தை நீடித்து உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 28ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்த ஊரடங்கு அடுத்த மாதம் 12ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.