வைட்டமின் ‘சி’ உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் - மருத்துவர்கள் யோசனை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Wednesday, 29 April 2020

வைட்டமின் ‘சி’ உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் - மருத்துவர்கள் யோசனை


ve="true"> , மினரல் சத்துகள் நிறைந்த சத்து பொருட்களை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம் நம்மை நாமே பாதுகாக்கலாம் என்று டாக்டர் தெரிவித்து உள்ளார். கோவை:
கோவையில் கொரோனா வைரசால் 141 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 118 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் பலர் குணமாகி வருகிறார்கள். கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு உத்தரவினால் மக்கள் ஒன்று கூடுவதை தடுப்பது, முக கவசம் அணிவது, கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகழுவுவது ஆகியவை ஒருபக்கம் இருந்தாலும்,
ve="true"> உணவு பொருட்களில் சத்தான பொருட்களை சேர்த்துக்கொள்வதும் அவசியம்.
இதுகுறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி இருப்பிட மருத்துவ அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற, டாக்டர் சவுந்திரவேல் கூறியதாவது:-
பொதுவாக வைட்டமின் ‘சி’ சத்து அதிக அளவில் சேர்ப்பதன் மூலம் சாதாரண சளி மற்றும் இருமலில் இருந்து தப்ப முடியும். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வைட்டமின் ‘சி’ சத்துகள் நிறைந்த ஆரஞ்சு, கொய்யா, கிவி பழம், எலுமிச்சை, பப்பாளி பழங்களை அதிகம் சாப்பிடவேண்டும். தக்காளியை பச்சையாக சாப்பிடலாம். தர்பூசணி பழங்களையும் சாப்பிடலாம். மேலும் முட்டைக்கோஸ், பச்சைமிளகாய், கீரை, காளிபிளவர், உருளைக்கிழங்கு
ve="true"> உள்ளிட்ட காய்கறிகளையும் அதிகம் சாப்பிட வேண்டும்.
வெறும் வயிற்றில் வைட்டமின் ‘சி’ கலந்த பழங்களை காலை நேரங்களில் சாப்பிடுவது நல்லது. அதன்பின்னர் ½ மணிநேரம் அல்லது 1 மணிநேரம் கழித்து மற்ற உணவுகளை சாப்பிடலாம். வைட்டமின் ‘சி’ சத்துகள் நிறைந்த உணவை சமைத்து சாப்பிடுவதைவிட பச்சையாக சாப்பிடலாம். காய்கறி போன்றவற்றை குக்கரில் சமைத்து மிளகு சேர்த்தால் நல்லது.
இதுதவிர மினரல் சத்து (ஸின்க்) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரசின் தாக்கத்தில் இருந்து நம்மை காக்கும். மினரல் சத்துகள் பால், முட்டை
ve="true"> , இறைச்சி, இறால், நெய், மற்றும் உணவு தானியங்களான கோதுமை, அரிசி, ஓட்ஸ் ஆகியவற்றில் உள்ளன. இரும்பு சத்து மற்றும் மினரல் சத்துகள் மிகவும் நல்ல.
எனவே வைட்டமின் ‘சி’ மற்றும் மினரல் சத்துகள், இரும்பு சத்து ஆகியவற்றை உணவில் சேர்த்து கொரோனா உள்ளிட்ட அனைத்து வகையான நோய்களின் தாக்கத்தில் இருந்தும் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.