மகிழ்ச்சியான செய்தி..குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

மகிழ்ச்சியான செய்தி..குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கி


இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI)தன் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டிக்கு அவசர கடன் வழங்கும் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
கடனுக்கான வட்டி 7.25% என்றும், அதற்கான தவணை  6 மாதங்களுக்குப் பின்னரே தொடங்கும்
எனவும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் Yono App என்ற செயலியைப் பதிவிறக்கும் செய்து, வீட்டிலிருந்தவாறே 45 நிமிடங்களுக்குள் இந்தக் கடன் தொகையைப் பெற்று விடலாம் என்று கூறப்படுகிறது. முதலில் வாடிக்கையாளர்கள் 567676 என்ற எண்ணுக்கு PAPL என SMS செய்ய வேண்டும். அதற்கு வரும் பதிலில், இந்த அவசரக் கடனைப் பெறத் தகுதி உண்டா இல்லையா என அறிவிப்பு வரும்.

தகுதி இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் Yono செயலியை பதிவிறக்கம் செய்து தங்கள் கணக்கில் நுழைய வேண்டும். பின்னர் கடன் தொகை, கால அளவு ஆகியவற்றை உள்ளிட வேண்டும். அதன்பிறகு மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை செயலியில் பதிவிட்டதும் வங்கி கணக்கிற்கு கடன் தொகை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது