மாற்றுத் திறனாளிகளுக்கு சம்பளத்துடன் சிறப்பு விடுப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Wednesday, 29 April 2020

மாற்றுத் திறனாளிகளுக்கு சம்பளத்துடன் சிறப்பு விடுப்பு


ஊரடங்கின் போது, வங்கிக்கு வர முடியாத, மாற்றுத்திறனாளி ஊழியர்களின் விடுப்பை, சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுப்பாக கருத வேண்டும்' என, மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, மத்திய அரசின், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் துறையின் இயக்குனர், கே.வி.எஸ்.ராவ் வெளியிட்ட அறிவிப்பு:ஊரடங்கின் போது, அத்தியாவசிய சேவையில் உள்ள மாற்றுத் திறனாளிகள்,
பணிக்கு வர விலக்குஅளிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.


இந்த உத்தரவு, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பணியாற்றும், மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கும் பொருந்தும்.ஆனால், பாரத ஸ்டேட் வங்கி, 'ஊரடங்கின் போது பணிக்கு வராத, மாற்றுத் திறனாளி ஊழியர்களின் விடுப்பு, மருத்துவ விடுப்பாக கருதப்படும்' என, சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

மாற்றுத் திறனாளி ஊழியர்கள் பணிக்கு வர, விலக்கு அளிக்கப்பட்ட நிலையில்,
அவர்களது விடுப்பு, மருத்துவ விடுப்பாக கருதப்படும் என, சுற்றறிக்கை அனுப்பியது முறையற்றது. அவர்களின் விடுப்பை, சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுப்பாக கருத வேண்டும்.எனவே, பாரத ஸ்டேட் வங்கி உட்பட, அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும்.


இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது