ரானுவத்தில் சூப்பர் பவர் நாடாக இருந்து என்ன பயன். ஒரு வேளை சாப்பிட்டிற்காக தெருவில் நிற்கிறோமே? விரக்தியில் அமெரிக்கர்கள் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ரானுவத்தில் சூப்பர் பவர் நாடாக இருந்து என்ன பயன். ஒரு வேளை சாப்பிட்டிற்காக தெருவில் நிற்கிறோமே? விரக்தியில் அமெரிக்கர்கள்

அமெரிக்காவில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கரோனா பலிகள் அதிகரித்து வருகின்றன, இதனையடுத்து லாக் -டவுன் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன, பொருளாதார வீழ்ச்சி இதுவரை இல்லாத அளவுக்கு மக்களின் வேலைகளைப் பறித்துள்ளது, உணவு இல்லாமல் வேலை பறிபோனவர்கள், கதியற்றவர்கள் உணவு வங்கிகள் முன்னால் வரிசை கட்டி நிற்கின்றனர்.
சிறு உணவுப்பொட்டலப் பங்குக்காக தள்ளு முள்ளு வேதனைக் காட்சிகளும் அங்கு பெருகிவருகின்றன.
விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கு பெரிய விலை கிடைப்பதில்லை என்ற காரணத்தினால் கூடுதல் தானியங்களை உணவு வங்கிக்கும் ஏழைகளின் பயன்பாட்டுக்கும் அளிக்காமல் அழித்து வருகின்றனர், புல்டோசர்கள் கொண்டு அழித்து வரும் காட்சிகள் சமூக ஊடகங்களில் அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் அமெரிக்க மக்கள் சமூக ஊடகங்களில் கண்டபடி கொந்தளித்துள்ளனர்.
அந்த கொந்தளிப்பு வரிகளில் சில: “ரொட்டி வரிசைகள், மக்கள் அமெரிக்காவில் உணவுக்காக வரிசை கட்டி காத்திருக்கின்றனர். சூப்பர் ராணுவ சக்தியாம் என்ன பயன்? ஒரு மாதத்தில் தெருவுக்கு வந்து விட்டோம்”
“விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டுமாம், எது இயல்பு நிலை? நிதி அளிக்கப்படாத மருத்துவ நலம், சமூக நலம் இயல்பா? இயல்பு என்பது மக்கள் கூலிக்காக வரிசைகட்டி நிற்பது, வாசலில் வரிசை கட்டி நிற்பது,
ஏழைகளிடமிருந்து பணக்காரர்கள் பறிப்பது ஒரு இயல்புநிலை, இயல்புதான் நம்மை சாகடித்து வருகிறது இயல்புதான் நம்மை பலவீனப்படுத்துகிறது, எது இயல்பு?” என்று ஒரு நெட்டிசன் வேதனையுடன் கேட்டுள்ளார்.
இன்னொரு ஆஃப்ரோ அமெரிக்கர் ஒருவர், ‘உணவு வங்கிகளுக்கு எப்போதையும் விட இப்போது நாம் தேவை” என்று முரண் நகை உணர்வுடன் பதிவிட்டுள்ளார்.
“என் குடியிருப்பில் சற்று முன் ஒருவர் என்னிடம் கூறினார், ‘ட்ரம்ப் நம்மையெல்லாம் ஒன்று சேர்த்துள்ளார் என்ற உண்மையை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்?’ என்றார். நான் ஆம் உண்மைதான் வாசலுக்கு நம்மை கொண்டு வந்து ஒன்று சேர்த்துள்ளார். வரிசையில் நம்மை ஒன்று சேர்த்துள்ளார்
. சாவுகளில் ஒன்று சேர்த்துள்ளார். நாம் பேசிக்கொண்டிருக்கும் போது பெரிய எண்ணிக்கையில் புதைக்க சுடுகாடுகள் உருவாகி வருகின்றன. இந்த உண்மைகளை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றேன்.
”அமெரிக்காவில் உணவு வங்கிகள் காலியாகும் நிலைமைகளைப் பார்க்கும் போது வேதனையாக உள்ளது. உலகின் பிற பகுதிகளில் ஊட்டச்சத்தின்மை மற்றும் பட்டினியால் வாடும் மக்களை நினைக்கும் போது இன்னமும் கூட தாங்க முடியாமல் இருக்கிறது”
“உலகப் பணக்காரர்களே அமெரிக்க விவசாயிகளின் விளைப்பொருட்களை வாங்குங்கள். ஆனால் இவர்கள் உடைந்தால் உலகில் பசி பட்டிணி பெருகும்.
இவர்கள் பொருட்களை வாங்கி உணவு வங்கிக்கு வழங்குங்கள் யாரும் பட்டினியால் சாகக் கூடாது” என்று இன்னொரு நெட்டிசன் அறைகூவல் விடுத்துள்ளார்.
“லாக் டவுன் உத்தரவுகளினால் காசு இல்லை என்று போராடும் முட்டாள்களே, காசு இருக்கும் போது துப்பாக்கிக்கு எவ்வளவு செலவழித்திருப்பீர்கள்?” “உலகின் நம்பர் 1 பொருளாதார நாடு அமெரிக்கா, உலக செலவத்தில் 30% வைத்துள்ளது. ஆனால் வரிசை, உணவு வங்க் வரிசை நீண்டுக் கொண்டே போகிறது. ஏன்? மக்களை விட பில்லியனர்கள்தான் உங்களுக்கு முக்கியம் அதனால்தான்”
இது தவிர உணவு வங்கிகளுக்கு உணவு அளிக்க நன்கொடை கோரும் ட்வீட்களும் அதிகமாக உள்ளன.