பாடப் புத்தகங்களை பதிவிறக்கம் செய்யலாம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Tuesday, 28 April 2020

பாடப் புத்தகங்களை பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை: அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடங்களை படிக்க விரும்புவோர், இணையதளத்தில் பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா சமூக பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் அடுத்தாண்டுக்கான பாடப்புத்தகங்களை வீட்டில் இருந்தபடியே, படிக்க, இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி பாடதிட்டத்தில், தமிழ்நாடு பாடநுால் கழகத்தின்,  tnschools.gov.in/textbooks  என்ற இணையதளத்தில், ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்கள், பாட வாரியாக புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிக்கலாம். 
சி.பி.எஸ்.இ., மாணவர்கள், வகுப்பு வாரியாக அனைத்து புத்தகங்களையும்,  epathshala.nic.in  என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து படிக்கலாம்