*ஊடக நிறுவனங்களுக்கு ஓர் ஆசிரியரின் மனம் திறந்த மடல்* - ஆசிரியர் மலர்

Latest

28/04/2020

*ஊடக நிறுவனங்களுக்கு ஓர் ஆசிரியரின் மனம் திறந்த மடல்*


இன்றைக்கு
ஊடகத்துறையில் வளர்ந்து நிற்கும்
பெரிய தொலைக்காட்சிகள்.
பத்திரிக்கை நிறுவனங்கள் என
அனைத்தின் வியத்தகு வளர்ச்சிக்குப் பின்னாலும்,
அவற்றில் பணிபுரியும்
*செய்தி ஆசிரியர்கள், செய்தியாளர்கள், பணியாளர்கள்*
எனப்  *பலருடைய அர்ப்பணிப்பும், வியர்வைத்துளிகளும் கலந்துள்ளது* என்பது
மறுக்கமுடியாத உண்மை..

கொரோனாவினால் இன்றைக்கு
அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளதைப்போல ஊடகத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது
ve="true"> ..

இந்த நேரத்தில்
தமது பணியாளர்களைத் தாங்கிப் பிடிக்க வேண்டியது ஒவ்வொரு ஊடகத்தின் கடமையாகும்..இது *ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்போற்றப்படும் ஊடகத்தைக் காக்கும் செயலாகும்.*

இந்த நேரத்தில் கொரோனாவைக் காரணம் காட்டி, ஊதியக்குறைப்போ,
பணிக்குறைப்போ என எதுவும் செய்யாமல்
ve="true"> அனைவரையும் தாயைப்போல அரவணைக்க வேண்டியது ஒவ்வொரு ஊடகத்தின் அறமாகும்..

தாம் பணிபுரியும் ஊடகத்தை
 *தமது உயிராய்,உணர்வாய்க் கட்டிக்காத்தவர்களைக் காத்துநிற்க வேண்டியதே* இந்த நேரத்தில்
ஊடகங்களின் தலையாய கடமையாகும்...

*தர்மம் தலை காக்கும்*

*சிகரம்சதிஷ்குமார்*
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459