லேசான கொரோனா அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு - ஆசிரியர் மலர்

Latest

28/04/2020

லேசான கொரோனா அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு


லேசான கொரோனா அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது, மேலும் சில வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு லேசான அறிகுறிகள் உள்ள நபர் என அறிவிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கான சில வழிமுறைகள்,
  • தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும், அவர்களது குடும்பத்தினர் தனிமைப்பட்டு இருக்கும் அளவுக்கான வசதி அவர்கள் வீட்டில் இருக்க
    வேண்டும்

  • உடனருந்து கவனிப்பதற்காக ஒருவரை நியமிக்க வேண்டும். அவர் மருத்துவமனை ஊழியர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும்
  • ஆரோக்யா சேது செயலி பயன்பாட்டிலேயே இருக்க வேண்டும்

  • தனிமைப்படுத்தப்படும் நபர்கள் தங்கள் உடல்நிலை குறித்து அனைத்து தகல்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உடல்நிலையை
    தொடர்ந்து கவனிக்கும் கண்காணிப்புக் குழு, மாவட்ட கண்காணிப்பு குழுவிடம் தகவல்களை அவ்வப்போது தெரியப்படுத்திக் கொண்டே இருக்க
    வேண்டும்.
  • வீட்டில் தனிமைப்படுத்துபவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம், மார்பு பகுதியில் நிலையான வலி / அழுத்தம், மன குழப்பம், உதடுகள் அல்லது
    முகத்தில் நீல நிறமாற்றம் போன்ற தீவிர அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்
தனிமைப்படுத்தப்படுபவர்களை கவனித்துக் கொள்பவர்களும், குடும்பத்தினரும் முன்னெச்சரிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கிருமிநாசினி கொண்டு கையைக் கழுவது, கையுறை, மாஸ்க் அணிவது போன்றவை கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனிமைப்படுத்தப்படுவர்ள் 3 அடுக்கு மாஸ்க் அணிய வேண்டுமென கூறப்பட்டுள்ளது
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459