ஊரடங்கு தளர்வுகளில் மாற்றம் - உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாடுகள் - ஆசிரியர் மலர்

Latest

 




20/04/2020

ஊரடங்கு தளர்வுகளில் மாற்றம் - உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாடுகள்


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் காரணமாக முதற்கட்டமாக நாடு தழுவிய ஊரடங்கு அமலில் ஏப்ரல் 14 வரை அமல்படுத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில், தொற்றின் தீவிரத் தன்மையால் தொடர்ச்சியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால், பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுகையில் இரண்டாவது முறையாக மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், அவரது உரையில், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நாடு முழுவதும் கொரோனா அதிகம் பாதிக்கப்படாத மாவட்டங்களில் சில தளர்வுகள் இருக்கும் என அறிவித்திருந்தார். இதனிடையே, தளர்வுகள் அமல்படுத்துவது பற்றிய முழுமையான முடிவுகள் உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்படும் என கூறியிருந்தார்.

மோடி

சில தினங்களுக்கு முன் மத்திய அரசு, அனைத்து அமைச்சர்களுடனான ஆலோசனைக்குப் பின் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு தளர்வுகள் குறித்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பில், அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற இணைய வர்த்தக நிறுவனங்கள் செயல்படலாம். மேலும், அவற்றின் மூலம் மொபைல் போன்,
டீவி, பிரிட்ஜ், லேப்டாப், துணிகள், பள்ளி மாணவர்களுக்கான எழுது பொருள்கள் போன்றவற்றை விற்பனை செய்யலாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகான நடைமுறையில் இருக்கும் விதிமுறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, அத்தியாவசியப் பொருள்கள் அல்லாது பிற பொருள்கள் விற்பனையை முந்தைய ஊரடங்கின் போது தடை செய்யப்பட்டிருந்தது போலவே இப்போதும் அமல்படுத்தப்போவதாக அறிவித்திருக்கிறது.

இந்தியாவில் ஊரடங்கு

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி, மே 3-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் விதிமுறைகள்;
நிதி சேவைகள்:
*ரிசர்வ் வங்கி வழக்கம் போல் செயல்பட அனுமதி அளித்துள்ளதோடு, ரிசர்வ் வங்கி சார்ந்த நிதி நிறுவன நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
*வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் அனைத்தும் வழக்கம் போல செயல்படுவதோடு, ஐடி நிறுவனங்கள் தங்கள் நிதி பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம்.
*செபி அதன் பணியை தொடரலாம் என்றும், மூலதனம் மற்றும் கடன் சந்தைகள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிக சேவைகள்:
*அச்சு மற்றும் மின்னனு ஊடகங்கள் தொடர்ந்து செயல்பட விலக்களிக்கப்பட்டுள்ளது.
*50 சதவிகித தொழிலாளர்களுடன் ஐடி நிறுவனங்கள் செயல்படலாம்.
*அரசாங்க நடவடிக்கைகளுக்கான கால் சென்ட்டர்கள் செயல்படலாம்.
*பஞ்சாயத்து மட்டத்திலான சமூக
பொறுப்புடைய செயல்களில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மைக்குகள்

கூரியர் சேவைகள்:
*குளிர்சாதன வசதி கொண்ட தானியக் கிடங்குகள் செயல்படலாம்
*தனியார் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை நிறுவனங்கள், ஹோட்டல்கள் ஆகியவை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
*எலக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள், தச்சர்கள் போன்ற சுய தொழில் செய்வோர் தங்களது பணியினை தொடரலாம்.
மக்கள் சேவையில் ஈடுபடுவோருக்கான அறிவிப்புகள்:
*அத்தியாவசிய சேவைகள், மருத்துவ தேவைகளுக்காக வாகனங்களை இயக்கலாம்.
*நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர், ஓட்டுனருக்கு அருகாமையில் இருக்காமல் பின் இருக்கையில் ஒருவர் மட்டும் அமர்ந்து செல்ல வேண்டும்.
*இரு சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும்.
*மாநில அரசுகளால் அத்தியாவசிய பணிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளோர் பணியினை தொடரலாம்.
*குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்கள்
வசிக்கும் இல்லங்கள் செயல்படலாம்.
*அங்கன்வாடிகள் செயல்படலாம்.

விவசாயம்

விவசாயிகளுக்கான கட்டுப்பாடுகள்;
*விவசாயிகள் வயல்களில் தங்கள் பணியை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதோடு, விவசாய பொருள்களை வாங்கும் மற்றும் விற்பனை செய்வோர் தங்களது பணியினை மேற்கொள்ளலாம்.
*உரங்கள் மற்றும் விதைகள் விற்பனை மையங்கள், விவசாய இயந்திர விற்பனை நிலையங்கள் செயல்படலாம்.
*விவசாயப் பொருள்களை நேரடி சந்தைப்படுத்துவதில் ஈடுபட அனுமதிப்பதோடு, சந்தைகள் மற்றும் மண்டிகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
*அதிகப்பட்சமாக 50 சதவீத பணியாளர்களுடன் தேயிலை, காபி, ரப்பர் தோட்டங்களில் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
*பால் பொருள்கள் விற்பனை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு மையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ நடவடிக்கைகளுக்கான அறிவிப்புகள்;
*அனைத்து மருத்துவமனைகள் மற்றும் மருந்துக் கடைகள், டெலி மெடிசன் வசதிகள் தடையின்றி தொடர்ந்து செயல்படலாம்.
* மருத்துவ ஆய்வகங்கள் மற்றும் கொரோனா தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளும் ஆராய்ச்சி நிலையங்கள் செயல்படலாம்.
*சுகாதார உள்கட்டமைப்பு பணிகள் மற்றும் மருத்துவ உபகரண தயாரிப்புகளில் ஈடுபடலாம்.
தொழில்துறை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்;
*தொழில்துறை எஸ்டேட்டுகள், கிராமப்புற தொழில்கள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த அமைப்புகள் செயல்பட அனுமதியளிக்கபப்ட்டுள்ளது.
*ஐடி வன்பொருள் நிறுவனங்கள், அத்தியாவசியப் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் ஆகியவை செயல்படலாம்.
*நிலக்கரி மற்றும் கனிம உற்பத்தியில் ஈடுபடுவோரும், கிராமப் புறங்களில் செங்கல் தயாரிப்பில் ஈடுபடும் செங்கல் சூளைகள் செயல்பட மத்திய அரசு அனுமதித்துள்ளது.
*சாலைகள் அமைத்தல், நீர்ப்பாசன திட்டங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் மட்டத்தில் கட்டுமான கட்டுமான நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

லாரிகள்

சரக்கு மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்;
*விமானம், ரயில் மற்றும் கடல்வழி போக்குவரத்து மூலம் மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்து அனுமதிக்கபப்ட்டுள்ளது.
*இரண்டு டிரைவர்கள் மற்றும் ஒரு க்ளீனருடன் கனரக கேரியர் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
*அத்தியாவசியப் பொருள்களை விநியோகித்தப் பின், வெற்று வாகனங்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.
*அத்தியாவசியப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடும் மொத்த மற்றும் சில்லரை விற்பனைக் கடைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது.
*நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஹோட்டல்கள் மற்றும் வாகனப் பழுதுப் பார்க்கும் கடைகள் செயல்படலாம்.
*அத்தியாவசியப் பொருள்கள் மக்களை சென்றடைவதில் பங்கு கொள்ளும் ஊழியர்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறைந்தப்பட்ச ஊழியர்களைக் கொண்டு, கூட்டுறவு கடன் சங்கங்கள், மைக்ரோ நிதி நிறுவனங்கள் செயல்படலாம். மேலும், நீர் வழங்கல், சுகாதாரம், மின்சாரம், தொலைத்தொடர்பு மற்றும் கேபிள் வசதிகளை அளித்து வரும் நிறுவனங்கள் கிராமப்புறங்களில் கட்டமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459