ஊரடங்கு உத்தரவு மே 7 வரை நீட்டித்த மாநிலம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

ஊரடங்கு உத்தரவு மே 7 வரை நீட்டித்த மாநிலம்


ஹைதராபாத்,
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16116 ஆக அதிகரித்துள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு 519 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மராட்டியத்தில் 4200 பேரும், டெல்லியில் 1893 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது.

மத்திய அரசு, கொரோனாவை கட்டுப்படுத்த முதற்கட்டமாக அமல்படுத்தப்பட்ட 21 நாட்களை, மே 3ம் தேதி வரை நீட்டித்து ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இந்தசூழலில்
ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் மே 7ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாகவும், அதுவரை எந்தவிதமான தளர்வுக்கும் வாய்ப்பு இல்லை என்றும் அம்மாநில முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். மேலும் அங்கு வீடுகளுக்கு உணவுப்பொருட்களை டெலிவரி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.