அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தைத் தாண்டிவிட்டது - ட்ரம்ப் கருத்து - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தைத் தாண்டிவிட்டது - ட்ரம்ப் கருத்துஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தைத் தாண்டிவிட்டது என ட்ரம்ப் கூறுகிறார்.
நியூயார்க் கவர்னர் ஊரடங்கு உத்தரவை மே 15ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார்.
அமெரிக்கா
கொரோனா வைரஸ்
பாதிப்பின் உச்சக் கட்டத்தைக கடந்துவிட்டது என அந்நாட்டு அதிபர்
டொனால்ட் ட்ரம்ப்
கூறியிருக்கிறார்.
அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,494 பேர் கொரோனா வைரசால் இறந்துள்ளனர். அந்நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 6.54 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை விலக்குவது பற்றி ஆலோசனை செய்துவருகிறார்
. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், “புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகிறவர்கள் எண்ணிக்கை உச்சக்கட்டத்தை கடந்துவிட்டது என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன” எனக் கூறினார்.
ஆனால், அமெரிக்காவில் ஒருநாளில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை
புதிய உச்சத்தை எட்டி உயர்ந்தபடியே உள்ளது.
கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டிசிவிர் மருந்து!!
இதனிடையே கொரோனா வைரஸ் தடுப்புக்காக ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால், 2.2 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். வேலை இல்லாதவர்களுக்கான உதவித் தொகையைப் பெற 52 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அமெரிக்காவில் மிக அதிக பாதிப்புக்குள்ளான நியூயார்க் மாகாணத்தின் ஆளுநர் ஆண்ட்ரூ கூமோ தமது மாகாணத்தில் மே 15ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்திருக்கிறார்.
நிலைமையில் முன்னேற்றம் இருப்பதாகக் கூறிய அவர், “புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இன்னும் குறையவேண்டும்.” என்றும் தெரிவித்திருக்கிறார்.
நியூயார்க் மாகாணத்தில் மட்டும் 24 மணிநேரத்தில் 606 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மொத்தம் 11,586 பேர் இறந்துள்ளனர்.