நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பருவ தேர்வுகள் ஒத்திவைப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Thursday, 16 April 2020

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பருவ தேர்வுகள் ஒத்திவைப்பு


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பருவ தேர்வுகள் மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு தெரிவித்துள்ளார். 
கரோனா பரவல் எதிரொலியாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நடப்பு ஆண்டின் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பருவ தேர்வுகள் மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு தெரிவித்துள்ளார். 
மறு தேர்வுக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இந்த கல்வியாண்டின் பருவம் வரும் 30 ஆம் தேதியுடன் முடிவுவடைகிறது என்றும் அவர் கூறியுள்ளார். அதேசமயம், இந்த பருவத்திற்கான நடத்தாத பாடங்களை ஆன்லைன் மூலமாக கற்பிக்க பேராசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.