இஸ்ரோவில் வேலைவாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




30/04/2020

இஸ்ரோவில் வேலைவாய்ப்பு

இஸ்ரோவில் வேலை - விண்ணப்பிக்க தயாரா ...

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் கீழ் ஆமதாபாத் நகரில் செயல்படும் 'ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர்' நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பதவிக்கு, விண்ணப்பிக்கும் கால அவகாசம் சுமார் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது.

காலியிடம்: சயின்டிபிக் இன்ஜினியர் (எலக்ட்ரானிக்ஸ், இயற்பியல், கம்ப்யூட்டர், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ஸ்ட்ரக்சரல்) 21, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல்) 6, டெக்னீசியன் (பிட்டர், மெசினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., பிளம்பர், கார்பென்டர், எலக்ட்ரீசியன், கெமிக்கல்) 25, டிராப்ட்ஸ்மேன் 3 என மொத்தம் 55 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: சயின்டிபிக் இன்ஜினியர் பதவிக்கு தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பதவிக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ, டெக்னீசியின் பதவிக்கு தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

வயது: பதவி வாரியாக மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை:எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:இல்லை.

கடைசி நாள்: 1.5.2020

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459