கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் படிப்பிற்கு அதிகரிக்கும் மவுசு - ஆசிரியர் மலர்

Latest

06/04/2020

கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் படிப்பிற்கு அதிகரிக்கும் மவுசு


திருவனந்தபுரம்: கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, நான்கு சுவர்களில் முடங்கியுள்ள மக்கள், தங்களது திறமையை வெளிகொணரும் வகையில் ஆன்லைன் திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்கேரளாவில் ஆன்லைனில் படைப்பாக்க திறனுடன் எழுதுவது குறித்து மாணவி ஒருவர் யோசனையை ஏற்று, பயிற்சி வகுப்பு நடத்தி வரும் கவிஞரும், கலைஞருமான பபிதா மரினா ஜஸ்டின் கூறியதாவது: பேஸ்புக்கில் ஆன்லைன் பயிற்சி குறித்து பதிவிடவே, ஏராளமானோர் ஆர்வமுடன் கற்று கொள்ள முன்வந்தனர். ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டில் தங்கியுள்ளனர். இயற்கை நம்மைநாமே புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு வழங்கியுள்ளது. பெரும்பாலான மக்கள் சலிப்பை உணர்வதாகவும், அதை பற்றி நகைச்சுவையடித்து பொழுது போக்குகின்றனர். ஆனால் பலர் தங்களுக்குள் உள்ள பொழுதுபோக்கு மற்றும் திறமையும் வெளிப்படுத்த பயன்படுத்துகின்றனர். இது தான் சரியான தருணம் என்று முடிவு செய்தேன். என்னுடைய முதல் பயிற்சி வகுப்பில் 20 மாணவர்கள் வரை பங்கேற்றனர். இவ்வாறு அவர் கூறினார்.ஆன்லைனில் பல்வேறு திறன் மேம்பாட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இல்லத்தரசிகள் தியான வகுப்புகள் முதல் மின்னிதழ் (ebooks) தயாரிப்பு வரையிலும், குழந்தைகள் தங்களது திறமையை வளர்த்தெடுக்கும் வகையில் வயலின் இசை வகுப்புகள் என பெரும்பாலான மக்கள் உள்ளார்ந்த திறமையை உணரவும், வளர்த்தெடுக்கவும் ஆர்வமுடன் கற்று வருகின்றனர். ஊரடங்கு காலம் மின்னிதழ் தயாரிப்பு குறித்து கற்று கொள்ள சரியான நேரமாகும். 3 நாட்கள் பயிற்சி வகுப்பில் தினமும் 2 மணி நேரம் செலவிட்டால் போதும். ஒவ்வொரு அமர்விலும் 30 பேர் வரை அனுமதிக்கிறோம்.

அதற்கு மேல் வரும்பட்சத்தில் ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட அமர்வுகள் இருக்க கூடுமென தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகியான ராம் கமல் தெரிவித்துள்ளார்.பெரும்பாலான இந்திய மொழிகளில், இ - பப்ளிகேஷன் என்பது புதிய கட்டத்தில் உள்ளது. இந்திய மொழிகளில் சில புத்தகங்கள் மட்டுமே முறையாக தயார் செய்யப்பட்டுள்ளன. உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் 10 சதவீத மக்கள் அச்சிடப்படும் புத்தகங்களை பார்வையின்மை, பார்வை குறைபாடு, வயது முதிர்வு போன்றவை காரணமாக வாசிக்க முடிவதில்லை. தானியங்கி வாசிப்பு மென்பொருளுடன் வரும் மின்னிதழ் அவர்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பதாகவும் ராம் கமல் தெரிவித்தார். 8.25 லட்சம் மின்னிதழ்களை ஆன்லைன் லைப்ரரி மூலம் வாசகர்களுக்கு அளித்து வரும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் புக் ஷேர் இண்டர்நேஷன் அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.மற்றொரு கேரளாவை சேர்ந்த அவுட் ஆப் தி பாக்ஸ் (OFB) ஊரடங்கு காரணமாக விடுமுறையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கென ஒரு வார ஆன்லைன் இலவச பயிற்சி வகுப்பினை துவங்கியுள்ளது. அறிவியல்பூர்வமான யோசனை செய்வது மற்றும் எண்ணங்களை வடிவமைப்பது எப்படி என மாணவர்களுக்கு போதிக்கப்படுகிறது. இந்த வாரம் துவங்கப்பட்டுள்ள இமேஜினேஷன் டூ இமேஜ் என்ற பாடம் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459