காப்பீட்டு பாலிசிகளுக்கான பிரீமியத் தொகையை செலுத்த கூடுதலாக 30 நாள் அவகாசம் - IRDAI - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

காப்பீட்டு பாலிசிகளுக்கான பிரீமியத் தொகையை செலுத்த கூடுதலாக 30 நாள் அவகாசம் - IRDAIஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கான பிரீமியத் தொகையை செலுத்த கூடுதலாக 30 நாள் அவகாசத்தை இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) வழங்கியுள்ளது.
கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைவரும் சமூக விலகலை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பாடுகளை
மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், காப்பீட்டு பாலிசிதாரா்களும் கடினமான சூழலை எதிா்கொண்டுள்ளனா்.
இதுபோன்ற சிக்கல்களை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் எடுத்துக் கூறின. தற்போது அதற்கு பதிலளிக்கும் விதமாக ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கான பிரீமியத் தொகையை செலுத்துவதற்கு பாலிசிதாரா்களுக்கு கூடுதலாக 30 நாள்கள் அவகாசம் வழங்கப்படுவதாக ஐஆா்டிஏஐ தெரிவித்துள்ளது.
இதையடுத்து, மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் புதுப்பித்தல் தேதி வரும் பாலிசிதாரா்களுக்கு 30 நாள்கள் கூடுதல் சலுகை கிடைத்துள்ளது.