திருத்தம் செய்யப்பட்ட புதிய பாடநூல்கள்  வெளியீடு! - ஆசிரியர் மலர்

Latest

 




01/05/2020

திருத்தம் செய்யப்பட்ட புதிய பாடநூல்கள்  வெளியீடு!


1 முதல் பிளஸ் 2 வரை பிழை திருத்தப்பட்ட புதிய பாடப்புத்தகங் கள் பள்ளிக்கல்வித் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 

 கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள் ளது. விடுமுறை காலத்தில் மாணவர்கள் வீட்டில் இருந்த படியே தேர்வுக்கு தயாராக ஏது வாக
பொதிகை மற்றும் கல்வி தொலைக்காட்சிகளில் பத்தாம் வகுப்பு பாடங்கள் காணொலி களாக தயாரிக்கப்பட்டு தினமும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. 
இதையடுத்து இதர வகுப்பு மாணவர்களின் நலன்கருதி 1 முதல் பிளஸ் 2 வரை பிழை திருத்தப்பட்ட பாடநூல்கள் பள்ளிக்கல்வி இணையதளத்தில் ( tnschools.gov.in/textbooks) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பாடப் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து வீட்டிலிருந்தபடியே மாண வர்கள் படிக்கலாம். 

 சிபிஎஸ்இ பாடங்கள் இதேபோல், சிபிஎஸ்இ மாண வர்களும் தங்கள் புத்தகங்களை epathshala.nic.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459