தங்கம் விலை என்ன தான் ஏற்ற இறக்கம் கண்டாலும் புள்ளிங்கோ, தங்கத்தை வாங்கிக் குவித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஏதோ லாக் டவுன் என்பதால் தற்போது தங்க வியாபாரம் கொஞ்சம் டல்லடித்து இருக்கிறது.
தலைப்பில் சொன்னது போல தங்கத்தை கம்மி விலைக்கு வீட்டில் இருந்த படி வாங்க முடியுமா..? முடியும் என்பது தான் பதில். எப்படி வாங்கலாம்.
அந்த அரசு திட்டம் என்ன என்பதைத் தான் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
அந்த அரசு திட்டம் என்ன என்பதைத் தான் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
தங்கம் விலை
தங்கம் வாங்கப் போனால், நாம் டிவியிலோ அல்லது இணையத்திலோ பார்க்கும் விலையை விட கூடுதல் விலைக்கு தான் வாங்க முடியும். காரணம் ஜிஎஸ்டி, செய் கூலி, சேதாரம் என நம் தலையில் கட்டி விடுவார்கள். பொதுவாக தங்கத்துக்கு 4 % முதல் செய் கூலி கணக்கிடத் தொடங்குகிறார்கள். அதே போல சேதாரம் நாம் வாங்கும் நகைகளைக் பொறுத்து 6 % முதல் வசூலிக்கிறார்கள் என வைத்துக் கொண்டால் கூட, சுமார் 10 % கூடுதலாக நம்மிடம் இருந்து பணத்தை கறந்து விடுகிறார்கள்.ஜிஎஸ்டி
இது போக தங்கத்தின் மீது சரக்கு மற்றும் சேவை வரியாக சுமார் 3 % வேறு வசூலிப்பார்கள். இந்த 3 % சரக்கு மற்றும் சேவை வரி கூட, நாம் சொல்லும் தங்கத்துக்கு செலுத்த வேண்டாம். லட்டு போல தங்கத்துக்கு மட்டும் காசு கொடுத்தால் போதும்.இப்படி அரசாங்கமா தங்கம் தருகிறது? என்று கேட்கிறீர்களா. ஆம். அந்த திட்டத்தின் பெயர் Sovereign Gold Bond.
என்ன திட்டம்
அதாவது தங்க பத்திரம் என்று சொல்லலாம். ஆங்கிலத்தில் அதை Sovereign Gold Bond என்பார்கள். அந்த அளவுக்கு இதில் பாதுகாப்பு அம்சங்களும், வருமானமும் இருக்கின்றன. இந்த தங்க பத்திரம் வாங்கினால் நீங்கள் தங்கம் வாங்கியதற்கு சமம்.சொல்லப் போனால் தங்கத்தை விட ஒரு படி மேல்.
எப்படி இரண்டும் சமம்
நீங்கள் தங்கத்தை வாங்கினால் என்ன செய்வீர்கள்..? கடையில் அடகு வைப்பீர்கள், அவசர பணத் தேவைக்கு வங்கிகளில் தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்குவீர்கள். இந்த வேலைகளை எல்லாம், தங்க பத்திரம் வைத்துக் கொண்டும் செய்யலாம். சொல்லப் போனால் தங்க பத்திரம் சுத்தமான தங்கமா என உரசிப் பார்க்க வேண்டிய வேலையே கிடையாது.தங்க பத்திர பேப்பர்களில் சொல்லப்பட்டு இருப்பது போல அது அக்மார்க் 24 கேரட் சுத்த தங்கத்துக்கு சமம்.
தங்கத்தின் சுத்தம்
ஆர்பிஐ இந்த தங்க பத்திரங்களை (Sovereign Gold Bond) மத்திய அரசு சார்பாக வெளியிடுகிறார்கள். ஆர்பிஐ விற்கும் இந்த தங்க பத்திரங்கள் 99.9 சதவிகிதம் சுத்தமான 24 கேரட் அக்மார்க் தங்கத்துக்கு சமம். India Bullion and Jewelers Association Limited வெளியிடும் 999 சுத்தமான தங்கத்தின் விலையைத் இந்த Sovereign Gold Bond-ன் விலையாக எடுத்துக் கொள்வதால் இந்த கணக்கு பொருந்துகிறது.
எப்போது வெளியிடுகிறார்கள்
தற்போது 2020 – 21 சீரிஸ் 1 தங்க பத்திரங்களை (Sovereign Gold Bond), 2020 ஏப்ரல் 20 முதல் 24 வரை வெளியிடுகிறார்கள். ஏப்ரல் 28 அன்று இந்த பேப்பர் தங்கம் வாங்கியவர் கணக்குக்கு பத்திரங்கள் வந்துவிடும். இது போக 2020 ஆகஸ்ட் வரை ஒவ்வொரு மாதமும் தங்க பத்திரங்களை வெளியிட இருக்கிறார்களாம்.என்ன விலை
ஒரு கிராம் தங்கத்தை 4,639 ரூபாய்க்கு மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட இருக்கிறார்களாம். இந்த தங்க பத்திரங்களை (Sovereign Gold Bond), ஆன்லைன் வழியாக இந்த வாங்கினால், கிராமுக்கு 50 ரூபாய் இன்னும் குறைவாக வாங்கலாமாம். அதாவது 4,589 ரூபாய்கு தங்கத்தை வாங்கலாம்.
பயம் வேண்டாம்
அதோடு தங்க நகைகளைப் போல திருடு போகும் என்கிற பயம் தேவை இல்லை. நாம் வாங்கும் தங்க பத்திரத்தை (Sovereign Gold Bond) யாராவது திருடிச் சென்றாலும், அவர்களால், அதை பணமாக்க முடியாது. எப்படியும் தங்க பத்திரங்களை நாம் வாங்கியவர்களிடம் சொல்லி, மீண்டும் வாங்கிக் கொள்ளலாம் என்பதால் பாதுகாப்பு மிகவும் அதிகம்.
யார் எல்லாம் வாங்கலாம்
இந்த தங்க பத்திரங்களை (Sovereign Gold Bond) இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமே வாங்க முடியும். தனி நபர்கள், இந்து கூட்டுக் குடும்பத்தினர்கள்,ட்ரஸ்டுகள், பல்கலைக்கழகங்கள் & தான தர்மங்களைச் செய்யும் அமைப்புகள் (Charitable trust) இந்த தங்க பத்திரங்களை வாங்கலாம். தனி நபர்கள் தங்களின் குழந்தைகள் பெயரிலும் வாங்கிப் போடலாம். தனி நபர்கள் கணவன் மனைவியாகச் சேர்ந்தும் (Joint Holder) வாங்கலாம். குறிப்பாக மைனர்கள் பெயரில் கார்டியன்களும் வாங்கலாம்.
ஆன்லைன் விண்ணப்பம்
தங்க பத்திரத்தில் (Sovereign gold Bond) முதலீடு செய்ய விரும்புபவர், எங்கும் அலையாமல் தங்கள் ஆன்லைன் பேங்கிங் முறையிலேயே விண்ணப்பிக்கலாம். உதாரணமாக ஹெச் டி எஃப் சி வங்கியின் ஆன்லைன் பேங்கிங் முறையில், லாக் இன் செய்த பின், Offers என்கிற டேப்பின் கீழ் இருக்கிறது இந்த தங்க பத்திரங்களை வாங்குவதற்கான ஆப்ஷன். ஆன்லைனில், வங்கி கேட்கும் விவரங்களைக் கொடுத்து,ஆன்லைனிலேயே பணத்தைச் செலுத்தி விண்ணப்பித்தால் போதும். தங்க பாண்டுகள் ஒதுக்கீடு ஆன பின் வங்கிகளில் இருந்து Physical / E Certificate பெற்றுக் கொள்ளலாம். இதை டீமேட் கணக்கில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.
எவ்வளவு வாங்கலாம்
தங்க பத்திரத்தில் (Sovereign gold Bond), தனி நபர்கள் 1 கிராம் தொடங்கி அதிகபட்சமாக ஒரு நிதி ஆண்டில் 4,000 கிராம் வரை தங்க பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இந்து கூட்டுக் குடும்பத்தினருக்கும் இந்த 4 கிலோ கிராம் தான் உச்ச வரம்பு. மற்ற அமைப்புகள் 20 கிலோகிராம் வரை தங்க பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.இந்த உச்ச வரம்பை அரசு அவ்வப்போது மாற்றும் என்பதும் கவனிக்க வேண்டி இருக்கிறது.
வேறு என்ன லாபம்
முன்பே சொன்னது போல1. இந்த தங்க பத்திரங்களை (Sovereign gold Bond), நகைக் கடையில் வாங்கும் தங்கத்துக்கு இணையாக எல்லா வகையிலும் பயன்படுத்தலாம்.
2. தங்க பத்திரங்களாக வாங்கப்படும் தங்கத்துக்கு தேய்மானம் கிடையாது.
3. ஒவ்வொரு ஆண்டுக்கும் 2.5 % வட்டி வேறு கொடுப்பார்கள்.
4. தங்கத்துக்கான வட்டி 6 மாதங்களுக்கு ஒரு முறை நம் வங்கிக் கணக்கில் போட்டு விடுவார்கள்.
5. எட்டு வருட முடிவில் மொத்த அசல் + கடைசி வட்டி என சேர்த்து போட்டு விடுவார்கள்
.
6. இவை எல்லாம் போக 8 வருடத்தில் தங்கத்தின் விலை ஏற்றத்தை நம் பாண்டுகள் கண்டு இருக்கும். எனவே 8 வருட தங்க விலை ஏற்றத்தை நாம் லாபமாகப் பார்க்கலாம்.
நடுவில் விற்கலாமா
தங்க பத்திரம் (Sovereign gold Bond) வாங்கி, 5 ஆண்டுகள் கழித்து, தங்க பத்திரங்களை விற்கலாம். அப்படி விற்க வேண்டும் என்றால், வட்டி போடும் தேதிக்கு ஒரு மாதம் முன்பே நாம் தங்க பத்திரங்கள் வாங்கியவர்களிடம் சென்று முறையாக தெரியப்படுத்த வேண்டும்.நம் மொபைல் எண், மின்னஞ்சல், வங்கிக் கணக்கு போன்றவைகளில் ஏதாவது மாற்றம் இருக்கிறது என்றால் கூட அதை இந்த ஒரு மாதம் முன்பே குறிப்பிட்டுச் சொல்லி மாற்றிக் கொள்வது நல்லது.