கொரோனா நிவாரனம் வழங்கிய ஆசிரியர் கூட்டணி - ஆசிரியர் மலர்

Latest

19/04/2020

கொரோனா நிவாரனம் வழங்கிய ஆசிரியர் கூட்டணி




*ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டோம்*.

இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கே! என்ற எண்ணத்தில் ....

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருநெல்வேலி மாவட்ட கிளை எடுத்த சிறு முயற்சியின் விளைவு*....

நலிவுற்ற கரகாட்ட கலைஞர்கள், தையல் கலைஞர்கள், மாற்று திறனாளிகள், செளராஸ்டிரா மக்கள், மிகவும் விளிம்பு நிலையில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு.... 

*ரூபாய் 2 லட்சம் செலவில்* நிவாரணப் பொருட்கள் வாங்கி வழங்கிட நேற்று மரியாதைக்குரிய *மாவட்ட ஆட்சியர் (பயிற்சி) சிவகுருநாதன் அவர்களிடம்* முறையாக ஒப்புதல் பெறப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து *பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் பயிலும் மூன்று மாணவர்களை*...

01.மகாலிங்கம்
02.நவீன்
03.மீஷாக் ராபின்சன் 

*தன்னார்வலர்களாக இன்று நம்முடன் வருகை தந்தனர்.*

இவர்களுடன் இணைந்து இன்று *திருநெல்வேலி மாநகரில் மொத்தம் 200 குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாய் செலவில் 10 கிலோ அரிசி பையுடன் தலா 1000/- ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.*

உலகையே அச்சுறுத்தும் உயிர்கொல்லி நோயான கோரனாவால் ஊரடங்கு உத்தரவிற்கு ஆட்பட்டு அடுத்த வேளை உணவிற்கே வழி தெரியாது வறுமையில் சிக்கி தவிக்கும் விளிம்பு நிலை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்கின்ற போது....

*TNPTF என்ற நமது பேரமைப்பு*...

*ஆசிரியர் நலன்*
*மாணவர் நலன்*
*சமூக நலனில்*

அன்றும் இன்றும் என்றும் அக்கறையுடன் செயல்படும் அமைப்பு என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கின்றது. 

இவ்வாறு நாம் செயல்பட காரணமே *நமது இயக்கத்தின் நாடி நரம்புகளாய் செயல்படும் நகர,வட்டார கிளை பொறுப்பாளர்களும்*..

*இரத்தமும் சதையுமாக இருக்கும் நமது இயக்க அடிப்படை உறுப்பினர்களும்தான்  என்பதை மாவட்ட கிளை எப்போதுமே முழுமையாக உணர்ந்துள்ளது.*

இச்சிறு முயற்சிக்கு காரணமாக இருந்த நமது *மாநில தலைவர்* தோழர்.மூ.மணி மேகலை அவர்களுக்கும்,  *மாநில பொதுச்செயலாளர்* தோழர்.ச.மயில் அவர்களுக்கும் *மாநில பொருளாளர்* தோழர்.க.ஜோதிபாபு மற்றும் *மாநில துணைப் பொதுச்செயலாளர்* தோழர்.சா.கணேசன் மற்றும் *STFI அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர்* தோழர்.ச.மோசஸ் அவர்களுக்கும் நெல்லை மாவட்ட கிளையின் நன்றியை உரித்தாக்குகிறோம்.

தோழமையுடன்....

செ.பால்ராஜ்
*மாவட்ட செயலாளர்*
திருநெல்வேலி.


தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459