இதென்ன புது சிக்கல் ?. கொரோனா குணமானவர்களுக்கு மீண்டும் அறிகுறி - குழம்பிய மருத்துவர்கள் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Thursday, 16 April 2020

இதென்ன புது சிக்கல் ?. கொரோனா குணமானவர்களுக்கு மீண்டும் அறிகுறி - குழம்பிய மருத்துவர்கள்


கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட் தாலுகாவில் உள்ள கொண்டன்கேரியைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த மார்ச் 19ஆம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர் மார்ச் 15ஆம் தேதி துபாயில் இருந்து இந்தியா திரும்பியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மடிகேரியில் உள்ள கோவிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் குணமாகி உடல் நலம் தேறி வந்த நிலையில் ஏப்ரல் 7ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதன்மூலம் வைரஸ் தொற்றுக்கு ஆளான ஒரேவொரு நபரும் குணமானதால், கொரோனா வைரஸ் பாதித்த மாவட்டங்களில் இருந்து குடகு நீக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் காய்ச்சல் மற்றும் கோவிட்-19 பாதிப்பின் அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
பொதுப் போக்குவரத்து vs தனியார் வாகனங்கள்- ஊரடங்கிற்கு பின் ஏற்படப் போகும் மாற்றம்!
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே மடிகேரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துக் கொண்டார். அங்கு அவரை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இவருடன் தொடர்பில் இருந்த நபர்களும் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.
இவரது ரத்த மாதிரிகள் மைசூருவில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் வைரஸ் பாதிப்பிலிருந்து
மீண்டு, மறுபடியும் அறிகுறிகள் தென்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி குடகு மாவட்ட துணை ஆட்சியர் அன்னிஸ் கன்மணி ஜாய் கூறுகையில், பரிசோதனை முடிவுகள் இன்று கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு வேறு காரணங்களால் காய்ச்சல் ஏற்பட்டிருக்கக் கூடும். எனவே பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம்.
பெங்களூரு மக்களுக்கு முக்கியச் செய்தி-
இந்த 38 பகுதிகள் தான் கோவிட்-19 ஹாட்ஸ்பாட்!
சம்பந்தப்பட்ட நபர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு அவரது வீட்டில் தான் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். எனவே இவர் மூலம் பிறருக்கு வைரஸ் பாதிப்பு பரவியிருக்கலாம் என்று அச்சப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதித்த மாவட்டங்களில் குடகு மீண்டும் இணைந்து கொண்டது.