தமிழகத்தில் முதல் முறையாக, கொரோனா பாதித்த பெண்ணுக்கு, சுக பிரசவம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Saturday, 25 April 2020

தமிழகத்தில் முதல் முறையாக, கொரோனா பாதித்த பெண்ணுக்கு, சுக பிரசவம்


தமிழகத்தில் முதல் முறையாக, சென்னையில் கொரோனா பாதித்த  பெண்ணுக்கு, சுக பிரசவம் நடந்துள்ளது.
கடந்த 3ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் 42 வயது நிறைமாத கர்ப்பிணி கொரோனா பாதிப்பினால் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து பிரசவத்திற்காக கடந்த 16ஆம் தேதி ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் 21ஆம் தேதி அவருக்கு சுகபிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.
அதன் பிறகு தாய் மற்றும் குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா இல்லை என்பது உறுதியானது. தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த முதல் சுகப்பிரசவம் இது. குணமடைந்த பெண் மற்றும் அவரது குழந்தையை மருத்துவர்கள் வாழ்த்தி, கரவொலி எழுப்பி அனுப்பி வைத்தனர்.