தமிழகம் முழுவதும் ஊரடங்கால் பாதிக்கப்படும் விவசாயிகளின் உதவிக்கு தொலைபேசி எண்கள் வெளியீடு.. - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Friday, 24 April 2020

தமிழகம் முழுவதும் ஊரடங்கால் பாதிக்கப்படும் விவசாயிகளின் உதவிக்கு தொலைபேசி எண்கள் வெளியீடு..


சென்னை:
கொரோனா ஊரடங்கால் தமிழக விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றனர்.
இந்த சீசனில் விளையும் பொருட்களை விற்பனை செய்ய முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து, விவசாயிகள், தங்களது வேளாண்மைபொருட்களை எடுத்துச்சென்று விற்பனை செய்ய தமிழகஅரசு அனுமதி வழங்கியது. இருந்தாலும் பல இடங்களில் காவல்துறையினர் அவர்களுக்கு அனுமதி வழங்குவதில் பாரபட்சம் காட்டி வருகின்றனர்.
விவசாயிகளுக்கு ஊரடங்கில் இருந்து தமிழகஅரசு விலக்கு அளித்தாலும், 
அவர்கள் விவசாயப் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கும் அனுமதி மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில்,  விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை எடுத்து செல்வதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் கொடுக்கப்பட்டுள்ள மாவட்டவாரியாக உள்ள காவல்துறை அதிகாரிகளின் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை பெற்று பயன் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு தொலைபேசி எண்களை அறிவித்து உள்ளது.