புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நாட்டில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 681 ஆக நேற்று காலை வரை இருந்தது. 4,258 பேர் குணமடைந்தும், 16,454 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர்
என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,393 ஆக உயர்வடைந்து இருந்தது.
என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,393 ஆக உயர்வடைந்து இருந்தது.
இந்த நிலையில், பலி எண்ணிக்கை இன்று 718 ஆக உயர்வடைந்து உள்ளது. இதுபற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் 4,749 பேர் குணமடைந்தும், 17,610 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது
. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,393ல் இருந்து 23,077 ஆக உயர்வடைந்து உள்ளது.
. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,393ல் இருந்து 23,077 ஆக உயர்வடைந்து உள்ளது.
நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் 6,430 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 283 பேர் பலியாகி உள்ளனர். இது நேற்று 269 ஆக இருந்தது. 840 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.