இந்திய பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 76.28 ரூபாயாக தொடங்கிய நிலையில், 76.43 ரூபாயாக குறைந்துள்ளது.
இதே கடந்த சந்தை முடிவில் ரூபாயின் மதிப்பு 76.29 ரூபாயாக முடிவடைந்த நிலையில் இன்று பெரியளவில் மாற்றமின்றி தான் வர்த்தகம் தொடங்கியது.
எனினும் கடந்த வாரத்தில் 76.55 ரூபாயாக வீழ்ச்சி கண்ட நிலையில், இன்று 76.43 ரூபாய் வரையில் வீழ்ச்சி கண்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிக்கப்படலாம்
கொரோனாவின் தாக்கம் மேற்கொண்டு அதிகமாக பரவுவதை தடுக்க, ஏற்கனவே 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த 21 நாள் ஊரடங்கு இன்னும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே சில மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஆபத்தான நிலை
கடந்த ஏப்ரல் 10 அன்று புனித வெள்ளி அன்று சந்தை மூடப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் மத்தியில் பொருளாதாரம் கண்ணோட்டம் குறித்த நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. இதனால் சந்தையில் ஆபத்தான நிலையே நிலவி வருகின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.பங்கு சந்தை வீழ்ச்சி
மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 470 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 30,688 ஆக வர்த்தகமாகி வருகிறது.இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 119 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 8,993 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது. இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 76.27 ரூபாயாகவும் உள்ளது.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி
வரலாறு காணாத அளவு கச்சா எண்ணெய் விலை கிட்டதட்ட 18 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி கண்டது. இந்த நிலையில் ஒபெக் நாடுகள்கிட்டதட்ட 10 மில்லியன் பேரல்கள் எண்ணெய் உற்பத்தியைனை குறைக்க ஒப்புதல் கொடுத்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவும் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி கண்டது.
கச்சா எண்ணெய் விலையேற்றம்
இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் ஓபெக் நாடுகளின் இந்த அறிக்கைக்கு பின்னர் கிட்டதட்ட கச்சா எண்ணெய் விலை 4% ஏற்றம் காண வழி வகுத்துள்ளது.நடப்பு ஆண்டில் அமெரிக்கா டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு 7% மேலாக குறைந்துள்ளது. இது இந்திய சந்தையில் அதிகளவிலான முதலீடுகள் வெளியேறி வருவதும் குறிப்பிடத்தக்கது.