தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,173 ஆக உயர்வு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,173 ஆக உயர்வு


Corona Updates: தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் இன்று மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை குணம் அடைந்தவர்கள் 58 பேர்..
28 நாள் வீட்டுக் கண்காணிப்பு முடித்தவர்கள் 63380 பேர். இதுவரை 12746 ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதுவரை உள்ள சோதனை மையங்கள் அரசு – 25. தனியார் – 9
புதியதாக 2 மையங்களுக்கு இன்று அனுமதி கிடைத்துள்ளது. 10 வயதுக்குட்பட்ட 31 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது”
என்று அவர் தெரிவித்துள்ளார்.