பீனிக்ஸ் வணிக வளாகம் சென்றவர்களுக்கு கொரோனா....அதிர்ச்சியில் மக்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




01/04/2020

பீனிக்ஸ் வணிக வளாகம் சென்றவர்களுக்கு கொரோனா....அதிர்ச்சியில் மக்கள்


சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் வணிக வளாகத்துக்கு(மால்) மார்ச் 10 முதல் 17ம் தேதி வரை சென்றவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 124 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா மேலும் பரவாமல் இருக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் பிரபல வணிக வளாகத்தில் பணியாளர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் வணிக வளாகத்தில் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும். இளைஞர்கள், இளம்பெண்கள் என ஏராளமானோர் அங்கு திரண்டுவருவர். இந்நிலையில், அங்கு தோல் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்த இளம்பெண் உட்பட 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பீனிக்ஸ் வணிக வளாகத்தில் மார்ச் 10ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை அந்த கடைக்கு சென்றவர்களுக்கு கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட அந்த நாட்களில் அந்த கடைக்குச் சென்றவர்கள் தாங்களே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 
மேலும் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459