அடுத்த 3 மாதங்களுக்கு EMI கிடையாது - அரசு மீண்டும் அறிவிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Tuesday, 31 March 2020

அடுத்த 3 மாதங்களுக்கு EMI கிடையாது - அரசு மீண்டும் அறிவிப்பு


கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் பால் சப்ளை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. கடைகளை குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
பஸ், ரெயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அன்றாட பணியாளர்கள், கூலி வேலை செய்வோர் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என பொதுமக்களில் பலர் வருவாய் இல்லாத சூழலில் உள்ளனர்.
இந்த நிலையில், மக்களின் சுமையை குறைக்கும் வகையில், அனைத்து வங்கிகளும் அடுத்த 3 மாதங்களுக்கு EMI வசூலிக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இன்று தமிழக நிதி துறை செயலாளர் கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, அடுத்த 3 மாதங்களுக்கு கடன்களுக்கான EMI மற்றும் வட்டி வசூலிக்கப்படாது என கூறினார்.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட உத்தரவு, அந்தந்த வங்கிகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.வங்கி வாடிக்கையாளர்கள் அதனை படித்து தெரிந்து கொள்ளலாம்.  இதுபற்றி அனைத்து வங்கிகளுக்கும் மீண்டும் ஒரு முறை அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.