ரஷியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியது - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Sunday, 26 April 2020

ரஷியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியது


ரஷியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதுபற்றி அந்த நாடு தெரிவித்ததாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 83 பிராந்தியங்களிலிருந்து புதிதாக 6,361 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 66 பேர் பலியாகியுள்ளனர். 517 பேர் குணமடைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அந்நாட்டில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 80,949 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 747 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 6,767 ஆகவும் உயர்ந்துள்ளது.