.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரிப்பிடித்தத்தை உடனடியாக திருப்பித்தர உத்தரவு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Wednesday, 8 April 2020

.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரிப்பிடித்தத்தை உடனடியாக திருப்பித்தர உத்தரவு

புதுடில்லி: ரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரிப்பிடித்தத்தை உடனடியாக திருப்பி அளிக்க மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று ஊரடங்கு மேலும் நீட்டிக்க பிரதமர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இந்நிலையில் ரூ.5 லட்சம் வரையிலான வருமான வரிப்பிடித்தத்தை
உடனடியாக விடுவிக்கும்படி, மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 14 லட்சம் பேர் பயன் பெறுவர்.
மேலும் அனைத்து ஜி.எஸ்.டி., தொடர்புடைய வரி பிடித்தத்தையும் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறு, குறு தொழில் நடத்துவோர் உட்பட 1 லட்சம் பேர் பயனடைவர்