COVID-19 வைரஸ் தொற்று உலகைக் கடுமையாகப் பாதித்து வரும் நிலையில் பல்வேறு செல்வந்தர்கள் மக்களுக்கு நிதியளித்து வருகின்றனர். அந்த வகையில் டாடா குழுமம் ரூ.1,500 கோடி வழங்கியுள்ளது.
கொவிப்ரோ லிமிடெட், விப்ரோ எண்டர்பிரைஸ் லிமிடெட், அஜிம் ப்ரேம்ஜி நிறுவனம் ஆகியவை இணைந்து ரூ1,125 கோடி நிதியுதவி அளித்துள்ளனர்.
இவை தவிர இன்னபிற நிறுவனங்களும் இச்சமயத்தில் அத்தியாவசியத் தேவைகளான உணவு, சானிடைஸர், முகக்கவசம் போன்றவற்றை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்த வரிசையில் Paytm, 4 லட்சம் முகக்கவசங்கள் மற்றும் சோப், சானிடைஸர் போன்ற 10 லட்சம் சுகாதாரப் பொருள்களை ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. இவை அதிகாரிகள் மூலம் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படும்.