மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு - மோடி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Tuesday, 14 April 2020

மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு - மோடி


புதுடில்லி: மேலும் 18 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. வரும் மே 3 ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என இன்று(ஏப்.,14) பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அளித்த உரையில் அறிவித்தார்.
முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24ம் தேதி இரவில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 21 நாள் ஊரடங்கு இன்று இரவுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், டிவி மூலம் பிரதமர் மோடி இன்று ( ஏப்.14 ம் தேதி ) பேசியதாவது:
கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை இந்தியா குறைத்துள்ளது. நாட்டை பாதுகாக்க உங்களுக்கு சில இடர்பாடுகள் ஏற்பட்டது. உங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகளை நான் புரிந்து கொண்டுள்ளேன். சிலர் குடும்பத்தைவிட்டு பிரிந்துள்ளனர் என்பதையும் உணர முடிகிறது. கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம்
. மக்களின் ஒத்துழைப்பால், கொரோனாவை கட்டுப்படுத்தி வருகிறோம்.
ஊரடங்கின்படி வீட்டில் இருந்து நாட்டை காப்பாற்றி இருக்கிறீர்கள். இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்தியா மிக தைரியமாக, கொரோனாவுக்கு எதிரான போரை எதிர்கொண்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில், மக்கள் ராணுவ வீரர்கள் போல் செயல்படுகின்றனர். வைரஸ் பாதிப்பை இந்தியா வெற்றிகரமாக சந்திக்கிறது. மக்கள் ஒத்துழைப்புடன் பெரிய அளவிலான பாதிப்புகளை தவிர்த்து வருகிறோம்
. மற்ற நாடுகளை விட கொரோனாவுக்கு எதிரான போரை இந்தியா நடத்தி வருகிறது. தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை வீட்டிலேலேயே இருந்து கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. சவால்களை சமாளிக்க அம்பேத்கரின் வாழ்க்கை நமக்கு வழிகாட்டுகிறது.
மேலும் 18 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. வரும் மே. 3 ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். ஊரடங்கு மிக அவசியமானது.
இவ்வாறு மோடி பேசினார்.