உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஆனாலும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர். கொரோனாவை எதிர்த்துப் போராடிவரும் மருத்துவப் பணியாளர்களும் ஆங்காங்கே கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
52 நாடுகளில் மட்டும் கிட்டத்தட்ட 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் மொத்தம் 8 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இப்படி மருத்துவப் பணியாளர்களையே கொரோனா தாக்கிவரும் நிலையில், உலகம் முழுவதும் மாஸ்க் மற்றும் சானிடைஸர்கள் பற்றாக்குறை இருந்துவருகிறது. இந்நிலையில், கோவையைச் சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவன் பிரணவ், மாஸ்கை சுத்தப்படுத்தும் ஒரு கருவி மற்றும் சானிடைஸரை எளிதில் பயன்படுத்தும் ஹேண்ட் பேண்ட் ஆகியவற்றையும் கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து பிரணவ்விடம் பேசியபோது, “களத்தில் ஏராளமானோர் நமக்காகப் பணியாற்றிவருகின்றனர்.
இதுகுறித்து பிரணவ்விடம் பேசியபோது, “களத்தில் ஏராளமானோர் நமக்காகப் பணியாற்றிவருகின்றனர்.
அதேபோல, பொது மக்களும் அத்தியாவசிய தேவைக்காக தினமும் வெளியில் வந்துகொண்டுதான் இருக்கின்றனர். அப்படி வருபவர்கள், மாஸ்க் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர்.
அப்படியே இருந்தாலும் அதை முறையாகப் பராமரிக்க முடிவதில்லை. சிலர் அழுக்கான கையால் அப்படியே, சானிடைஸர் கன்டெய்னர் மற்றும் மாஸ்க்கை தொடுகின்றனர். அதுவே சுகாதாரமற்றதாகத் தெரிந்தது.
அப்படியே இருந்தாலும் அதை முறையாகப் பராமரிக்க முடிவதில்லை. சிலர் அழுக்கான கையால் அப்படியே, சானிடைஸர் கன்டெய்னர் மற்றும் மாஸ்க்கை தொடுகின்றனர். அதுவே சுகாதாரமற்றதாகத் தெரிந்தது.
இவற்றையெல்லாம் மனத்தில் வைத்துதான் இந்த இரண்டு கண்டுபிடிப்புகளையும் உருவாக்கினேன். ஹேண்ட் பேண்டை பொறுத்தவரை களத்தில் இருக்கும் மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறை, வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் எளிதில் பயன்படுத்தலாம். அந்த பேண்டை கையில் மாட்டிக்கொண்டு, நமக்கு தேவைப்படும்போது பட்டனை அழுத்தினால் போதும்
. அதில் இருந்து வரும் சானிடைஸர்களால் கைகளைச் சுத்தப்படுத்திக்கொள்ளலாம். அதே மாதிரிதான் மாஸ்க்கும்.
. அதில் இருந்து வரும் சானிடைஸர்களால் கைகளைச் சுத்தப்படுத்திக்கொள்ளலாம். அதே மாதிரிதான் மாஸ்க்கும்.
நான் வடிவமைத்துள்ள கருவியை, மாஸ்குடன் இணைத்துக் கொள்ளலாம். பட்டனை அழுத்தினால், சானிடைஸர் மாஸ்க்கில் பரவி சுத்தப்படுத்திவிடும். என் 95 மாஸ்க் எளிதாகக் கிடைப்பதில்லை. அந்த நேரத்தில், மற்ற மாஸ்க்குகளைப் பராமரிப்பது சற்று கடினம். இந்த சவால்களைச் சமாளிக்கத்தான் என்னுடைய இரண்டு கண்டுபிடிப்புகளையும் உருவாக்கியுள்ளேன்” என்றார்.