நடிகர் ராகவா லாரன்ஸ் 3 கோடி நிதியுதவி !! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

நடிகர் ராகவா லாரன்ஸ் 3 கோடி நிதியுதவி !!


இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால் , தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால் , சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா் இவா்களுக்குத் திரையுலகினா் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்கள். முன்னணி திரையுலகப் பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். ஏற்கெனவே, தமிழ்த் திரையுலகப் பிரபலங்களில் சிவகார்த்திகேயன் , அஜித் குமார் உள்ளிட்டோர் நிதியுதவி வழங்கியுள்ளனர். இந்த நிலையில், பிரதமா் நிவாரண நிதி , முதல்வா் நிவாரண நிதி மற்றும் பெப்சி என அனைத்துக்குமே
நடிகா் ராகவா லாரன்ஸ் நிதியுதவி வழங்கியுள்ளார். பிரதமர் , முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம், பெப்சிக்கு ரூ.50 லட்சம், நடன கலைஞர்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் , மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 25 லட்சமும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு ரூ.75 லட்சமும் லாரன்ஸ் என நிதியுதவி வழங்கியுள்ளார் www.Asiriyarmalar.com