தமிழ் ஆண்டு வட்ட அட்டவணையில் 34வதாக வரக் கூடிய சார்வரி வருடம் 2020 ஏப்ரல் 13ம் தேதி இரவு 7.20க்கு கிருஷ்ணபட்சம், சஷ்டி திதி, மூல நட்சத்திரத்தின் 4ம் பாதத்தில் துவங்குகிறது.
தற்போது நமது நாட்யை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் நோய்க் கிருமிகளின் தாக்கம் மே மாத இறுதியில் குறையும், ஆனால் மீண்டும் சில கிருமிகள் உருவாக வாய்ப்புள்ளது. இயற்கை பேரிடர் ஏற்பட வாய்ப்புள்ளது என, பஞ்சாங்கக் குறிப்புகள் கூறுகின்றன. ஓரளவு மழை பெய்து பயிர் செழித்தாலும் பற்றாக்குறை இருக்க வாய்ப்புள்ளது. ஆனால்.. அனைத்து சிரமங்களிலிருந்தும் மீண்டு வெளிவருவோம்.
தெய்வ வழிபாடும் ஆன்மிக நம்பிக்கையும் நம்மையெல்லாம் காப்பாத்தப்போகுதுங்க.
மேஷம்
டென்ஷன்கள் இந்த வருடம் குறையும்னாலும்.. மெல்ல.. படிப்படியாய்க் குறையும். புத்தாண்டின் தொடக்கத்தில் பொருளாதார நிலை உயரும் என்று நீங்க தைரியமா நம்பலாங்க. . தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். கணவன் – மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். சண்டைகளும் சஞ்சலங்களும் டாட்டா சொல்லி டும். செய்யும் முயற்சிகளில் அவசரம் காட்ட வேண்டாம். கொஞ்சம் பொறுமையாவே காலை எடுத்து வைங்க. எதிலும் ஆலோசித்து முடிவெடுப்பதே நல்லதுங்க. எது செய்வதானாலும் அனுபவம் வாய்ந்தவங்களின் ஆலோ சனைகளைக் கேளுங்க. அல்லது உங்க ஜோசியரைக் கலந்தாலோசியுங்க. நல்ல வங்களைப் பகைச்சுக்கறீங்க. வேணாமே. அவங்க வழிகாட்டல் தக்க சமயத்தில் கைகொடுக்கும்.. நல்ல வாய்ப்புகள் வந்து கதவை தட்டும். அப்போதென்று பார்த்துத் தூங்கிடாதீங்க. ப்ளிஸ். வளர்ச்சி யில் இருந்த தளர்ச்சி அகலும். ஆனாலும் நிலைமை முழுசா சீராகணும்னா இந்த வருடத் தோட இரண்டாவது பாதியில்தாங்க அது சாத்தியம். கோபத்தைக் கட்டாயமாய்க் கட்டுப்படுத்திக்கணும்.
பேச்சில் கவனமா இருக்கணும். மாணவ மாணவியர்க்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. தேவையற்ற சகவாசத்தைத் தவிர்க்கவேண்டியது அவசியம். பெண்மணிகளுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கணவரின் அன்பும் அவர் வழி உறவினர்களால் நன்மைகளும் ஏற்படும். சிலருக்கு வெளியூர் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
பரிகாரம் : சிவன் வழிபாடு சகல வளம் தரும்.
ரிஷபம்
சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு உங்களுக்குத் துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். எதையும் எதிர்கொண்டு ஜெயிக்கும் பலம் மனசுக்குக் கிடைக்குமுங்க. தொல்லை தந்தவங்க விலகுவாங்க. பணப்புழக்கம் அதிகரிக்கும். தனித்து இயங்கும் ஆற்றல் உருவாகும். தந்தை வழி உறவில் இருந்த சண்டைகளும் சச்சரவுகளும் காணாமல் போயிடும்.. தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கு முங்க. மனக்குழப்பங்கள் அகலும். பிசினஸிலும் .. அலுவலகத்திலும் இருந்தக்கிட்டிருந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும். தாராளமாகச் செலவிடும் வாய்ப்பு கைகூடுமளவுக்கு வருமானம் வருமுங்க.. பெரிய பொறுப்புகள் மற்றும் பதவிகளிலிருந்து விலகியவர்களுக்கு மீண்டும், அதில் சேரக்கூடிய வாய்ப்பு கைகூடும். திருமண தடை அகலும். மம்மியின் உடல் நலம் சீராகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் “பை..பை” சொல்லி ஓடிவிடும். மகிழ்ச்சியான சம்பவங்கள் நிறைய நடைபெறும். ஆரோக்கிய பாதிப்புகளில் இருந்து விடுபடுவீங்க. அருகில் இருப்பவர்களின் ஆதரவு கூடுதலாக கிடைக்குமுங்க. நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீங்க.
கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடு அகலும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுவீங்க. அப்படி இது வரை காட்டலைன்னா அதை இப்பவே ஆரம்பிங்க. பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. அவங்ககிட்ட பரிவும் அனுசரணையும் அதிகமாக்க வேண்டிய டைம் இது.
பரிகாரம் : முருகன் வழிபாடு தைரியம் வளர்க்கும்.
மிதுனம்
பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீங்க. கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவாங்க. சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீங்க. குடும்பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீங்க. உறவினர்களால் உதவி கிடைக்கும் அதே நேரத்தில் அவர்களால் சிறு உபத்திரவமும் ஏற்படலாம். உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வாங்க. அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் ஒரு படி உயரும்.கொஞ்ச நாளாவே சின்னச் சின்ன இடர்கள் காரணமா முன்னேற்றம் முட்டுக்கட்டை போட்டு நின்னுக்கிட்டிருந்தது இல்லையா? இனி தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்குமுங்க.
துணையாக இருக்கும் நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவாங்க. வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். பணியாளர்கள் தொல்லை அகலும். திடீர் திருப்பங்கள் பல வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீங்க. வீடு கட்டுவதில் இருந்த தடை அகலும். குடும்ப உறுப்பினர்களின் குணமறிந்து நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கை தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.
பரிகாரம் : குரு வழிபாடு மங்கள வாழ்வு தரும்.
கடகம்
கலைத்துறையைச் சேர்ந்தவங்களுக்கு எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங் கள் கையெழுத்தாகும். பட்டங்களும் விருதுகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். அரசால் கௌரவிக்கப்படுவீங்க. தொழில் சம்பந்தமாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீங்க. ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது.இந்த ஆண்டு வளர்ச்சி அதிகரிக்கும். வசதிகள் பெருகும். வருமானம் உயரும். அலுவலகவாசி களுக்குத் தாமதப்பட்ட பதவி உயர்வு தடையின்றி கிடைக்குமுங்க.
பணி நிரந்தரம் ஆகாதவர் களுக்கு அது பற்றிய தகவல் வரலாம். அரசாங்க ஆதரவும், வசதியான வாழ்க்கையும், வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவாகும். உங்க பிள்ளைங்களால் பிரச்சினை ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனைகளை முறையாக நிறைவேற்றுவீங்க. வெரிகுட். நிலையான வருமானம் வர ஆரம்பிக்குமுங்க. பயணங்கள் அதிகரிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டுங்க. புதிய வாகனம் வாங்குவீங்க. திட்டமிடாது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்குமுங்க. பணத்தட்டுப்பாடு அகலும். நேர்முக தேர்வில் வேலை கிடைக்குமுங்க. நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்வர். இதுவரை மனம் மாறாமல் இருந்த மேலதிகாரிகள், இப்பொழுது உங்க குரலுக்கு செவிசாய்ப்பர்.
பரிகாரம் : துர்கை வழிபாடு துன்பம் போக்கும்.
நாளை: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்…