ஜூன் 10ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது - மமதா பானர்ஜி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Saturday, 11 April 2020

ஜூன் 10ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது - மமதா பானர்ஜி


கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஜூன் 10ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அதை  கட்டுக்குள் கொண்டு வர, அமலில் உள்ள ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையே, ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளன.
அதேபோல் மே 1ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக பஞ்சாப் மாநிலம் அறிவித்துள்ளது. இந் த நிலையில், மேற்கு வங்கத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
முன்னதாக,  ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க பிரதமருக்கு, மமதா பானர்ஜி கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.