தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்ட தகவலில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1477 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 411 ஆகவும் உள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . அத்துடன் சென்னையில் 4 மருத்துவர்களுக்கு இன்று கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், சென்னையில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அதிகரிக்கும் குழந்தை ஆபாசப்பட தேடல்.. உளவியல் சொல்லும் காரணம் என்ன?