நம் பூமியின் காந்தபுலம் எப்படி உருவாகியிருக்கும் ? ஆய்வில் சுவராஸ்யம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Sunday, 15 March 2020

நம் பூமியின் காந்தபுலம் எப்படி உருவாகியிருக்கும் ? ஆய்வில் சுவராஸ்யம்


நம் பூமியில் மேலோடு, நடுக்கவசப் பகுதி, அடியில் உள்ள மையப்பகுதி என்று 3 அடுக்குகள் உள்ளன. இதில் அடியில் உள்ள ‘கோர்’ என்று அழைக்கப்படும் மையப்பகுதியிலிருந்துதான் பூமியின் ஆதி புவியீர்ப்புக் காந்தப் புலம் தோன்றியிருக்கும் என்ற ஆராய்ச்சி முடிவின் அடுத்தக் கட்டமாக மேலோடு மற்றும் அடிமையப் பகுதிகளுக்கு இடையில் இருக்கும் நடுக்கவசப் பகுதியான மேண்ட்டிலில் இருந்து பூமியின் ஆதி காந்தப் புலம் உருவாகியிருக்கும் என்று புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
‘எர்த் அண்ட் பிளானட்டரி சயன்ஸ் லெட்டர்ஸ்’ என்ற இதழில் வெளியான கட்டுரையின்படி ஸ்கிரிப்ஸ் கடலாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
பூமியின் நடுக்கவசப் பகுதி சிலிகேட் பொருளினால் ஆனது இது பொதுவாக அவ்வளவு நல்ல மின் கடத்தி அல்ல, மோசமான மின் கடத்தி என்றுதான் அறியப்பட்டிருந்தது.
ஆகவே பூமியின் நடுக்கவசப்பகுதியின் கீழே பில்லியன் ஆண்டுகளாக திரவ வடிவம்தான் இருந்தது என்றாலும் கூட திரவத்தின் அதிவிசை ஓட்டம் கூட காந்தப் புலத்தை உருவாக்கும் அளவுக்கு பெரிய மின்சாரச் சக்தி கொண்டதல்ல, அதாவது பூமியின் அடியாழ கோர் பகுதியில் இருக்கும் மின் நடவடிக்கை போன்று இல்லாவிட்டாலும் கூட மேண்ட்டில் பகுதியிலிருந்து ஆதிகால புவியீர்ப்பு காந்தப் புலம் உருவாகியிருக்கலாம் என்பதே இந்தக் கண்டுபிடிப்பின் சாராம்சமாகும்.
ஆய்வாளர்களான ஸ்டெக்மேன், லியா ஸீய்க்லர் மற்ரும் நிகோலஸ் பிளாங்க் ஆகியோர் ஆதி பூமியின் மேண்ட்டிலில் புவியீர்ப்பு விசையை உருவாக்கியிருக்கும் தெர்மோடைனமிக்ஸ் குறித்த புதிய கணிப்புகளை வழங்குகின்றனர்.
அதாவது திரவ சிலிகேட் உண்மையில் எதிர்பார்த்ததை விட கூடுதல் மின் கடத்தியாக செயல்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர்
“இப்போதைக்கு மகா ஒருங்கிணைப்புக் கோட்பாடு எதுவும் எங்கள் இடத்தில் இல்லை, அதாவது வெப்ப ரீதியாக பூமி எப்படி பரிணாமம் அடைந்திருக்கும் என்பதற்கான மகா ஒருங்கிணைபுக் கோட்பாடு எதுவும் எங்களிடத்தில் இல்லை. பூமியின் பரிணாமம் குறித்த புரிதலில் எங்களிடம் எந்த ஒரு கருத்தாக்க சட்டகமும் இல்லை. பூமிக்கவசப்பகுதியான மேண்ட்டிலில் புவியின் ஆதி தோன்றியிருக்கலாம் என்பது இப்போதைக்கு சாத்தியம் குறித்த ஒரு முற்கோள்தான்.
புவிபவுதிகத் துறையின் மிகவும் ஆணித்தரமான கோட்பாடு என்னவெனில் பூமியின் அவுட்டர் கோர் பகுதியில் உள்ள திரவம்தான் காந்தப் புலத்தை உருவாக்கியிருக்கும் என்பதே.
இன்னொரு ஆய்வுக்கட்டுரையில் ஸ்டெக்மான் குழுவின் இந்த ஆய்வைப் பயன்படுத்தி இன்னொரு புவிபவுதிக ஆய்வாளர் ஜோசப் ஓ’ரூர்கே என்பவர் கூறும்போது வீனஸ் கிரகத்தில் ஒருகாலக் கட்டத்தில் உருகிய மேண்ட்டிலில் உருவாகியிருக்கலாம் என்கிறார்.
பூமி மற்றும் பிற கிரகங்களில் உள்ள திரவ, உலோக மையப்பகுதிகள் வேகமாக சுழன்று காந்தப்புலங்கள் உருவாகியிருக்கலாம் என்கிறார் அவர்.
ஸ்டெக்மான் கோட்பாட்டின் அடிப்படைகள் சரியாக இருந்தால் ஆதி பூமியில் மேண்டிலில்தான் முதல் உருவாகியிருக்க வேண்டும்.
இந்த ஆய்வை மேலும் வளர்த்தெடுத்துச் சென்றால் டெக்டானிக் பிளேட்கள் என்ற கண்டத்தட்டுக்கள் உருவான வரலாற்றையும் கண்டுபிடிக்கலாம் என்று நம்புகின்றனர்.
“பூமியின் கோர் பகுதிக்கு மேலே மேண்ட்டிலின் உருகிய அடிப்பகுதியில் உருவாகியிருக்குமேயானால், பூமிக்கு இதுவே பாதுகாப்பு கவசமாக இருந்து பிற்பாடு பூமியில் உயிர்கள் உருவாக்க சாத்தியக் கூறுகளை ஏற்படுத்தியிருக்கலாம்” என்கிறார் ஆய்வாளர் ஸ்டெக்மேன்.

No comments:

Post a comment